Home /News /chennai /

சென்னையில் வாக்காளர் அடையாள அட்டையினை ஆதார் எண்ணுடன் இணைக்க சிறப்பு முகாம்

சென்னையில் வாக்காளர் அடையாள அட்டையினை ஆதார் எண்ணுடன் இணைக்க சிறப்பு முகாம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Aadhaar Voter ID Link | சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் அடையாள அட்டையினை ஆதார் எண்ணுடன் இணைப்பது தொடர்பான சிறப்பு முகாம் பெறவிருக்கிறது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    . தேர்தலில் நடக்கும் முறைகேடுகளைத் தவிர்க்க, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பிரச்சாரத்தை தேர்தல் ஆணையம் முன்னெடுத்துள்ளதக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நாடு முழுவதும் கடந்த 01.08.2022 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் அடையாள அட்டையினை ஆதார் எண்ணுடன் இணைப்பது தொடர்பான சிறப்பு முகாம் 04.09.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.

    Read More : ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையோடு இணைப்பது எப்படி?


    எனவே, இந்தச் சிறப்பு முகாமினை பயன்படுத்தி வாக்காளர் பொதுமக்கள் அனைவரும் தாமாக முன்வந்து வாக்குச்சாவடி நிலை அலுவலரை அணுகி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அடையாள அட்டை எண்ணை இணைத்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    மேலும், ஏற்கனவே இணையதளம் மூலமாகவோ அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக வந்தபோது படிவம் 6பி, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அடையாள அட்டை எண் மற்றும் கைபேசி விவரங்களை வழங்கியவர்கள் இந்த முகாமில் கலந்து கொள்ள தேவையில்லை.
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Aadhaar card, Chennai, Voters ID

    அடுத்த செய்தி