ஹோம் /நியூஸ் /சென்னை /

நடிகையின் செல்போன் எண்ணைக்கேட்டு கேமராமேனுக்கு கொலை மிரட்டல் விடுத்தவருக்கு சம்மன்...

நடிகையின் செல்போன் எண்ணைக்கேட்டு கேமராமேனுக்கு கொலை மிரட்டல் விடுத்தவருக்கு சம்மன்...

யூட்யூபர் சூர்யா

யூட்யூபர் சூர்யா

Poonamallee | நடிகை பத்மபிரியாவின் செல்போன் எண்ணை கேட்டு சினிமா கேமராமேனுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது காவல் நிலையத்தில் புகார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Poonamallee, India

  சென்னை ராமாபுரம் பாரதி சாலைநகர் பகுதியில்  வசித்து வருபவர் பிரபாகர் (வயது 52). இவர் சினிமா துறையில் கடந்த 30 வருடங்களாக கேமரா மேனாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு சூர்யா என்பவர் பிரபாகரனை சந்தித்து நடிகை பத்மபிரியாவை வைத்து பாரதியார் பாடல் ஒன்றை ஒளிப்பதிவு செய்து தருமாறு கேட்டுள்ளார்.

  இதனிடையே இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் சூர்யா நடிகை பத்மப்ரியாவின் செல்போன் நம்பரை கேட்டு பிரபாகரனுக்கு தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை பிரபாகரன் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த சூர்யா தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் பிரபாகரன் மனைவியை கற்பழித்து விடுவதாகவும், செல்போன் நம்பரை தர மறுத்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

  ஆகவே கேமராமேன் பிரபாகரன் இது சம்பந்தமாக ராமாபுரம் காவல் நிலையத்தில் கடந்த 11ஆம் தேதி அன்று  புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், இச்சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் புகார் தொடர்பாக பிரபல யூட்யூபர் சூர்யா நடிகை பத்மபிரியாவை காவல் நிலையம் அழைத்து விசாரணை செய்தால் பல்வேறு உண்மைகள் வெளியாகும் எனக் கூறி வீடியோ ஒன்றையும் வெளியிட்டார்.

  Also see... குடிபோதையில் 16வயது சிறுமிக்கு பாலியல் சீண்டல் - வாலிபர் போக்சோவில் கைது

  இந்த வீடியோ பரவி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. மேலும் இது தொடர்பாக சூர்யா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். இந்த நிலையில் புகார் மனுவை காவல் ஆணையரகம் சம்பந்தப்பட்ட ராமாபுரம் காவல் நிலையத்திற்கு மாற்றியது. இது தொடர்பாக  சூர்யாவை  ராமாபுரம் போலீசார் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளனர்.

  செய்தியாளர்: சோமசுந்தரம், பூந்தமல்லி

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Chennai, Crime News, Heroine