Home /News /chennai /

கடனை கட்டச்சொல்லி அமைச்சருக்கு டார்ச்சர்.. சென்னை கால்சென்டர் அடாவடி

கடனை கட்டச்சொல்லி அமைச்சருக்கு டார்ச்சர்.. சென்னை கால்சென்டர் அடாவடி

ஆந்திராவை சேர்ந்த விவசாய துறை அமைச்சர் காகானி கோவர்தன ரெட்டி

ஆந்திராவை சேர்ந்த விவசாய துறை அமைச்சர் காகானி கோவர்தன ரெட்டி

இஎம்ஐ தொகையை வசூலிக்க ஆந்திர அமைச்சருக்கு சென்னையை சேர்ந்த கால் சென்டர் பணியாளர்கள் 1 மணி நேரத்தில் 50 க்கும் மேற்பட்ட முறை போன் செய்து தொந்தரவு செய்துள்ளனர்.

    சென்னை திருமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஜவஹர்லால் நேரு சாலையில்  அமைந்துள்ளது கோல்மேன் கால் சென்டர். அதே பகுதியில் அரும்பாக்கம், மற்றும் வடபழனி ஆகிய இடங்களில் இவர்களின் கால் சென்டர் கிளைகள் 24 மணி நேரமும் செயல்பட்டு வங்கிக் கடன் கட்ட தவறியவர்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .

    இந்நிலையில் சென்னையை சேர்ந்த அசோக் என்பவர் தனியார் வங்கியில்  சமீபத்தில் 9 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. வாங்கிய கடனுக்கு மாத EMI  தொகையாக ரூபாய் 25,000 சரியாக கட்டப்படாத நிலையில் வங்கி நிர்வாகம் அசோக் -ன்  தொலைபேசி எண்ணை திருமங்கலத்தில் செயல்பட்டு வரும் கோல்மேன் கால் சென்டருக்கு கொடுத்து கடனை வசூல் செய்ய தொலைபேசி மூலம் பேசுவதற்காக கொடுத்துள்ளனர்.

    ஆனால் இந்த கோல்மேன் கால் சென்டர் பணியாளர்கள் அசோக் தொலைபேசி எண்ணை பயன்படுத்தி அவருடைய  செல்போனை ஹேக் செய்து அதில் உள்ள தொலைபேசி எண்களுக்கு தொடர்ந்து போன் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    அதில் ஆந்திராவை சேர்ந்த விவசாய துறை அமைச்சர் காகானி கோவர்தன ரெட்டி என்பவரது தொலைபேசி எண்ணுக்கு மட்டும் இந்த கோல்மேன் கால்சென்டரில் 50- க்கும் மேற்பட்ட முறை தொலைபேசி மூலம் தொடர்ந்து பேசி அசோக் வாங்கிய கடனுக்கு EMI தொகையை கட்டுமாறு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து விசாகப்பட்டினம் தலைமையக SPஅலுவலகத்தில்  அமைச்சர் காகாணி கோவர்தன ரெட்டி புகார் தெரிவித்தார். அதன்பின்னர்  பெறப்பட்ட புகாரின் மீது நடவடிக்கை எடுக்க விசாகப்பட்டினத்திலிருந்து சென்னை வந்த  ஆந்திரா சிறப்பு தனிப்படை காவல் துறையினர் திருமங்கலத்தில் செயல்பட்டு வந்த கோல்மேன் கால் சென்டரின் விவரங்களை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் முழுமையாக ஆராய்ந்தனர்.

    Also see... குமரி மேற்கு கடல் பகுதியில் முடிவுக்கு வருகிறது மீன்பிடி

    பின்னர் அமைச்சருக்கு தொல்லை கொடுத்த திருமங்கலம் கால் சென்டர்  அலுவலகத்தில் இருந்த 2- க்கும் மேற்பட்ட கணினி மற்றும் 1 லேண்ட் லைன் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து ஆந்திர விசாகப்பட்டினம் கிளம்பி சென்றனர். இதில் கைது நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர்: கன்னியப்பன், திருமங்கலம்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Chennai, Crime News, EMI

    அடுத்த செய்தி