முகப்பு /செய்தி /சென்னை / சென்னையில் சொந்த வீடு வாங்க இளைஞர்களிடம் அதிகரிக்கும் ஆர்வம்... கவனத்தில் கொள்ள வேண்டியவை..!

சென்னையில் சொந்த வீடு வாங்க இளைஞர்களிடம் அதிகரிக்கும் ஆர்வம்... கவனத்தில் கொள்ள வேண்டியவை..!

மாதிரி படம்

மாதிரி படம்

இஎம்ஐ தவணை மாதத்திற்கு குறைந்தது 5 முதல் 6 ஆயிரம் ரூபாய் வரை அதிகம் கட்ட வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

சொந்த வீடு என்பது அனைத்து தரப்பு மக்களின் கனவுகளில் ஒன்று. அந்த வகையில் சென்னையில் கடந்த 4 ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு சொந்த வீடு வாங்குவதில் 25 முதல் 35 வயதுவரையிலான இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். 2021-22 ல் 14 ஆயிரத்து 357 வீடுகள் விற்பனையாகியுள்ளன இதன்மூலம் 406 கோடி ரூபாய் பத்திரப்பதிவுத்துறைக்கு கிடைத்துள்ளது.

ஆனால் 2022- 23 ஜனவரி மாத கணக்கின்படி 11 ஆயிரத்து 761 வீடுகள் விற்பனையாகி 390 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. அதிலும் குறிப்பாக ஐடி துறையில் வேலை செய்வோர் ஓஎம்ஆர், இசிஆர், துரைப்பாக்கம், நீலாங்கரை, அம்பத்தூர் போன்ற இடங்களில் 700 முதல் 1200 சதுர அடி கொண்ட வீடுகளை வாங்குவதாக கட்டுமானத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

முன்பு ஒரு படுக்கை அறை கொண்ட வீடு வாங்கியவர்கள் தற்போது இரண்டு படுக்கை அறை கொண்ட வீடுகளையும், இரண்டு படுக்கை அறை வைத்திருப்போர் மூன்று படுக்கையறை கொண்ட வீடுகளையும் வாங்குகின்றனர். வீட்டிலேயே இருந்து வேலை செய்யும் நிலை இன்னமும் பல நிறுவனங்களில் தொடர்வதும் விற்பனை அதிகரிக்க காரணமாக உள்ளது. யாருடைய தொல்லையும் இல்லாமல் தனி அறை இருந்தால் சிரமமில்லாமல் வேலை செய்யலாம் என்ற எண்ணத்திலும் பலர் சொந்த வீடு வாங்குவது அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் மாநிலம் முழுக்க கொடுக்கப்படும் கடன்களில் 65 சதவீத கடன்கள் சென்னையில் உள்ள நபர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பலர் தங்கள் சொந்த பயன்பாட்டுக்காக வாங்கினாலும் இன்னும் சிலர் சேமிப்பிற்கும் எதிர்காலத்திற்கும் வீடு வாங்குகின்றனர்.

இந்த நிலையில் வீட்டுக் கடன் வட்டி 6 சதவீதத்தில் இருந்தது தற்போது எட்டரை சதவீதமாக உயர்ந்து இருப்பதையும் மக்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். இதனால் இஎம்ஐ தவணை மாதத்திற்கு குறைந்தது 5 முதல் 6 ஆயிரம் ரூபாய் வரை அதிகம் கட்ட வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.

First published:

Tags: Chennai, Home Loan