சென்னை தியாகராய நகர் ராமசாமி தெருவை சேர்ந்தவர் சரவணன். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். மயிலாடுதுறையை சேர்ந்த ஆரோக்கியராஜ் என்பவரிடம் இவர் சுமார் 5 கோடி ரூபாய் வரை பணம் வாங்கிய நிலையில், அதனை திருப்பி கொடுக்காததால், ஆரோக்கியராஜ் மற்றும் அவரது ஆட்கள் 12 பேர் சேர்ந்து சரவணனை காரில் கடத்தினர். மேலும் சரவணனுக்கு சொந்தமான பென்ஸ் மற்றும் பி.எம்.டபிள்யூ. கார்களையும் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் எடுத்துச் சென்றனர்.
இது குறித்து சரவணனுடைய சகோதரர் முத்துக்குமரன் அளித்த புகாரின் அடிப்படையில் தி.நகர் துணை ஆணையர் மற்றும் தனிப்படை போலீசார் கடத்தல் காரர்களை வலை வீசி தேடி வந்தனர். சரவணகுமாரின் பி.எம்.டபிள்யூ. காரை குறிவைத்து விசாரணை செய்தபோது, அது செம்மஞ்சேரி அருகே இருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து செம்மஞ்சேரி மற்றும் கண்ணகி நகரில் நிறுத்தப்பட்டிருந்த பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ கார்கள் மற்றும் கடத்தல் கும்பலை சேர்ந்த அனைவரையும் போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.
மணல் காண்ட்ராக்ட் - ரூ.5 கோடி:
ஆரோக்யராஜுக்கு தேனியில் மணல் காண்ட்ராக்ட் எடுத்து தருவதாக சரவணகுமார் கூறி உறுதி அளித்ததாகவும், அதற்காக ஆரோக்கியராஜ், சரவணகுமாருக்கு 5 கோடி ரூபாய் பணம் வரை கொடுத்ததும் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து மணல் காண்ட்ராக்ட் வாங்கி கொடுக்காமலும் பணத்தையும் திருப்பி அளிக்காமல் ஏமாற்றி வந்ததால் இது தொடர்பாக பலமுறை சரவணக்குமாரிடம் ஆரோக்கியராஜ் கேட்டு இருக்கிறார். ஆனால், சரவணகுமார் பணத்தை திருப்பி அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் தான், ஆரோக்கியராஜ் தனது ஆட்களுடன் வந்து சரவணகுமாரை தன்னுடைய காரில் கடத்தி சென்றதும், மேலும் சரவணகுமாருக்கு சொந்தமான பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ கார் மற்றும் வீட்டில் இருந்த 45 லட்ச ரூபாய் மதிப்பிலான மூன்று வாட்ச்சுக்கள் விலை உயர்ந்த காலணிகள் மற்றும் ஷூக்கள் ஆகியவற்றை எடுத்துச் சென்றதும் தெரிய வந்தது. அதனை போலீசார் மீட்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்த கடத்தல் புகார் தொடர்பாக ஆரோக்கியராஜ், அரவிந்த், அஃப்ரோஸ் அஜய், விஜயபாண்டி, நாகேந்திரன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் நாகேந்திரன் கோயமுத்தூர் சிறையில் காவலராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்ரோஸ் என்பவர் எம்.டெக் முடித்து கம்ப்யூட்டர் இன்ஜினியராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து விலை உயர்ந்த இரண்டு கார்கள், விலை உயர்ந்த 15 செல்போன்கள், இரண்டு பொம்மை துப்பாக்கிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்த தி.நகர் துணை ஆணையர் மற்றும் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Businessman, Chennai, Crime News, Kidnapping Case