ஹோம் /நியூஸ் /சென்னை /

ஹோட்டல் காரக்குழம்பில் காது குடையும் பட்ஸ்.. பல்லாவரத்தில் பரபரப்பு சம்பவம்

ஹோட்டல் காரக்குழம்பில் காது குடையும் பட்ஸ்.. பல்லாவரத்தில் பரபரப்பு சம்பவம்

ரிமாறப்பட்ட காரக்குழம்பில் காது குடையும் பட்ஸ் -

ரிமாறப்பட்ட காரக்குழம்பில் காது குடையும் பட்ஸ் -

சென்னை பல்லாவரம் தனியார் உணவகத்தில் குழம்பில் காது குடையும் பட்ஸ் இருந்ததால் சாப்பிட வந்தவர் அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் பட்ஸ் கிடப்பதை வெளியில் சொல்லாமல் இருக்க ஐந்து மூட்டை அரிசி கேட்டு மிரட்டியதாக கடை உரிமையாளர் விளக்கமளித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai [Madras], India

  சென்னை பல்லாவரத்தில் கீதா கபே என்ற தனியார் சைவ உணவகத்தை கடந்த 60 வருடங்களாக மணிகண்டன் என்பவர் நடத்தி வருகிறார். இந்த உணவகத்தில் 6 ஊழியர் வேலை செய்து வருகிறார்கள். இந்த உணவகத்தில் பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் நேற்று மதிய உணவு சாப்பிட  சென்றுள்ளார். அப்போது அவருக்கு பரிமாறப்பட்ட கார குழம்பில் காது குடைய பயன்படுத்தப்படும் பட்ஸ் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உணவுக உரிமையாளரிடம் கேட்டபோது முறையாக பதில் சொல்லாமல் எடுத்து போட்டுவிட்டு சாப்பிடவும் என்று  கூறியதாக தெரிவித்துள்ளார். பரிமாறப்பட்ட காரகுழம்பில் இருந்த பட்ஸை அவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

  இதுகுறித்து கடை உரிமையாளரான மணிகண்டன் என்பவரிடம் கேட்டபோது, மதிய உணவு உண்பதற்காக இரண்டு நபர்கள் வந்ததாகவும் நாங்கள் பரிமாறிய உணவில் பட்ஸ் இருந்ததாக கூறி நீண்ட நேரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  இந்த விஷயம் வெளியே தெரியாமல் இருக்க வேண்டும் என்றால் ஐந்து மூட்டை அரிசி எங்களுக்கு தர வேண்டும் என மிரட்டல் விடுத்ததாகவும் கடை உரிமையாளர் கூறியுள்ளார்.

  Also Read : ஸ்டாலின் மிகவும் நல்லவர் தான்... அவருடன் இருப்பவர்கள்தான் தூண்டி விடுகின்றனர்- ஹெச்.ராஜா

  இதனால் நான் ஒரு சிறிய கடையை நடத்தி வருகிறேன் என்னால் அவ்வளவு தொகை கொண்டு அரிசி மூட்டை கொடுக்க முடியாது என்றேன். இதையடுத்து உன் கடையை காலி செய்கிறேன் என்று கூறிவிட்டு அவர்கள் சென்று விட்டதாகவும் கடை உரிமையாளர் தெரிவித்தார்.

  இந்த ஹோட்டலில் மதிய உணவு சாப்பிட்ட  முருகன் என்பவரை தொடர்பு கொண்டு பேசிய பொழுது வந்து தான் பதில் அளிப்பதாக கூறிய அவர் நேரில் வராமலும் எந்த விதமான தொலைபேசி அழைப்புகளை எடுக்கவும்.. இவர்கள் சாப்பாட்டில் உண்மையாகவே உணவில் பட்ஸ் கிடந்ததா அல்லது உணவிற்குள் சாப்பிட வந்த நபர்களே போட்டுவிட்டு ஐந்து மூட்டை அரிசி தரவேண்டும் என மிரட்டல் விடுத்தார்களா என்பது விசாரணையிலேயே தெரியவரும்.

  செய்தியாளர் : சுரேஷ், சென்னை

  Published by:Vijay R
  First published:

  Tags: Chennai