முகப்பு /செய்தி /சென்னை / முருங்கைக்காயை எடுத்து தாக்கியதால் ஆத்திரம்.. வடமாநில இளைஞரை அடித்தே கொன்ற சிறுவர்கள்.. வேளச்சேரியில் பகீர் சம்பவம்..

முருங்கைக்காயை எடுத்து தாக்கியதால் ஆத்திரம்.. வடமாநில இளைஞரை அடித்தே கொன்ற சிறுவர்கள்.. வேளச்சேரியில் பகீர் சம்பவம்..

மாதிரி படம்

மாதிரி படம்

Crime News : சென்னை வேளச்சேரியில் வடமாநில இளைஞரை அடித்து கொலை செய்த 7 சிறுவர்கள் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

சென்னை வேளச்சேரி விஜிபி செல்வா நகரில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ரமேஷ் மண்டல்(29), கட்டிடவேலை செய்து வந்துள்ளார். இவர் கடந்த 27ம் தேதி அதே பகுதியில் உள்ள காய்கறி கடைக்கு சக வடமாநில தொழிலாளர்களுடன் சென்று  காய்கறி வாங்கிக்கொண்டு பின்னர் மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது தரமணி பகுதியை சேர்ந்த கோகுலகிருஷ்ணன்(21), பெருங்குடி, பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் என மொத்தம் 9 பேர் சாலையில் நடனம் ஆடிக்கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களுடைய கால் சுரேஷ் மண்டல் மீது பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் பையில் இருந்த முருங்கைக்காயால் அவர்களை அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் அருகில் இருந்த கட்டையை எடுத்து வந்து சுரேஷ் மண்டலின் தலையில் பலமாக தாக்கியுள்ளனர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் மயங்கி கீழே விழுந்துள்ளார்.

இதையடுத்து 9 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வேளச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலத்த காயத்துடன் ‌சுயநினைவின்றி இருந்த ரமேஷ் மண்டலை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கம்பி மற்றும் கம்பால் முதுகு மற்றும் தலையில் கடுமையாக தாக்கியதில் உடலில் வெளி காயம் ஏதுமில்லாமல் உள் காயம் மட்டும் இருந்தது தெரியவந்தது. பின்னர் தலையில் மண்டை ஓடு உடைந்து மூளையில் ரத்தம் உறைந்து இருப்பதால் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது.

இதையடுத்து, வடமாநில இளைஞரை தாக்கிய கோகுலகிருஷ்ணன், ஹரிகரன் மற்றும் 7 சிறுவர்கள் உள்ளிட்ட 9 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், நேற்று வடமாநில கட்டிட தொழிலாளி ரமேஷ் மண்டல் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, சம்பவம் தொடர்பாக வேளச்சேரி போலீசார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்தனர்.

செய்தியாளர் : வினோத் கண்ணன் - இசிஆர்

First published:

Tags: Chennai, Crime News, Local News