Home /News /chennai /

வளசரவாக்கத்தில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் திருப்பம்.. சமூக வலைத்தளத்தால் வந்த வினை..

வளசரவாக்கத்தில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் திருப்பம்.. சமூக வலைத்தளத்தால் வந்த வினை..

காதலன் மது மோகன் கைது

காதலன் மது மோகன் கைது

Valasaravakkam | தனது செல் போனை காதலன் பிளாக் செய்ததால் மன உளைச்சலுக்கு ஆளான காதலி தற்கொலை செய்து கொண்டதாக வளசரவாக்கம் போலீசார் தெரிவிக்கின்றனர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    வளசரவாக்கம், பழனியப்பா நகரை சேர்ந்தவர், ராமகிருஷ்ண ராவ்(53), இவர் சினிமா துறையில் கேமரா மேனாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் அரிதா ராஜேஸ்வரி(25) பட்டப்படிப்பு முடித்த இவர் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயார் செய்து கொண்டு மாணவர்களுக்கு டியூஷன் எடுத்த வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் அரிதா ராஜேஷ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்து சென்ற வளசரவாக்கம் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். இதை அடுத்து வளசரவாக்கம் இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குரூஸ் தற்கொலை செய்து கொண்ட அரிதா ராஜேஸ்வரி செல்போனை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டார்.

    இதுகுறித்து போலீசார் கூறியதாவது : அரிதா ராஜேஷ்வரி சமூக வலை தளம் வாயிலாக மதுமோகன்(35), என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். அரிதா ராஜேஷ்வரியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி நெருங்கி பழகிய பின் மது மோகன், அரிதா ராஜேஷ்வரியை தொடர்பு கொள்ளாமலும் பேசுவதை நிறுத்தியும் வந்துள்ளார்.

    Also see... புதுக்கோட்டை தயாராகும் 5 லட்சம் தேசியக் கொடிகள்

    மேலும் அரிதா ராஜேஷ்வரியின் செல்போன் எண்ணையும் பிளாக் செய்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த அரிதா ராஜேஷ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து மது மோகனை வளசரவாக்கம் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    செய்தியாளர்: சோமசுந்தரம், பூந்தமல்லி
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Chennai, Commit suicide, Crime News, Love

    அடுத்த செய்தி