குன்றத்தூரில் குழந்தைக்கு கட்டிய புடவை தொட்டிலில் கழுத்து இறுக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவொற்றியூர், விம்கோ நகர் பகுதியை சேர்ந்தவர் பிரகாசம் இவரது மகன் தீபக்(15), ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி விடுமுறை என்பதால் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர், மணிகண்டன் நகர் பகுதியில் உள்ள அவரது உறவினர் மணிமாறன் என்பவரது வீட்டிற்கு தன்பி விக்னேஷ் உடன் தீபக் வந்துள்ளார்.
மணிமாறனுக்கு குழந்தை பிறந்ததால் குழந்தையை தூங்க வைப்பதற்காக வீட்டினுள் புடவையால் தொட்டில் கட்டியுள்ளனர். தீபக் மற்றும் அவரது தம்பி விக்னேஷ் இருவரும் தொட்டில் கட்டி உள்ள அறையில் இருந்தனர். மணிமாறன் அந்த அறைக்கு எழுந்து சென்று பார்த்தபோது தீபக் குழந்தைக்கு கட்டிய புடவை தொட்டிலில் கழுத்து இறுக்கி தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தீபக்கை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் தீபக் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
Read More : சனீஸ்வரன் கோவிலுக்கு சென்று திரும்பிய சுற்றுலா வேன் மோதி, போலீஸ்காரர்கள் இருவர் பலி.. 5 பேர் படுகாயம்.. ராசிபுரத்தில் சோகம்
குன்றத்தூர் போலீசார் தீபக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்த போது குழந்தைக்கு கட்டிய புடவை தொட்டிலில் விளையாடும் போது கழுத்து இறுக்கி தீபக் இறந்து போனது தெரியவந்தது. இதுகுறித்து குன்றத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.