ஹோம் /நியூஸ் /சென்னை /

மனைவியுடன் சண்டை.. பழிவாங்க ப்ளான்.. ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்!

மனைவியுடன் சண்டை.. பழிவாங்க ப்ளான்.. ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்!

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

Bomb threat | குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் கைது செய்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னை நோக்கி நேற்று முன்தினம் வந்த குருவாரூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து, ரயிலை தாம்பரத்தில் நிறுத்தி வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை ஈடுபட்டனர். இதில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.

இதுகுறித்து தனிப்படை அமைத்து விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், சென்னை வேளச்சேரி கங்கையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சதீஷ் பாபு என்பவரை பள்ளிக்கரணை போலீஸார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இரண்டாவது மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினையால், அவரது செல்போனில் பேசி மாட்டிவிட முயற்சித்தது தெரியவந்தது. மேலும் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்ததால், சதீஷ் பாபு-வை காவல் நிலைய பிணையில் விடுவித்தனர்.

First published:

Tags: Arrested, Bomb, Chennai, Train