முகப்பு /செய்தி /சென்னை / விமானத்தை தவறவிட்ட ராணுவ வீரர் - விரக்தியில் வெடிகுண்டு புரளியை கிளப்பி பீதியை ஏற்படுத்தியதால் பரபரப்பு

விமானத்தை தவறவிட்ட ராணுவ வீரர் - விரக்தியில் வெடிகுண்டு புரளியை கிளப்பி பீதியை ஏற்படுத்தியதால் பரபரப்பு

விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

Chennai Airport : விமானத்தை தவறவிட்ட ஆத்திரத்தில் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ராணுவ வீரரால் பரபரப்பு ஏற்பட்டது. 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

ஐதராபாத்தில் இருந்து சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு செல்லும் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக ஐதராபாத் விமான நிலையத்திற்கு செல்போனில் தொடர்புகொண்ட நபர் மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஐதராபாத் போலீசார் விமான நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும், இதுகுறித்து விசாரித்தபோது விமானத்தை தவறவிட்ட ராணுவ வீரர் ஒருவர் விமான நிலையத்தில் இருந்துகொண்டே போன் செய்தது தெரியவந்தது.  இதையடுத்து, அவரை ஐதரபாத் விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு காலை 11.30 மணிக்கு வந்த விமானத்தில் வெடிகுண்டு ஏதாவது இருக்குமோ? என்ற பீதி எழுந்தது. இதையடுத்து பாதுகாப்பு வீரர்கள், மத்திய தொழிற்படை போலீசார் இணைந்து மோப்ப நாய் உதவியுடன் விமானத்தில் ஏறி தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் அதில் ஏதும் கிடைக்கவில்லை. இது வதந்திதான் என உறுதிப்படுத்தினர். இதனால் பகல் 12.15 மணிக்கு ஐதராபாத் செல்ல வேண்டிய விமானம் சோதனைகள் முடிந்த பின் புறப்பட்டு செல்லும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தியாளர் : சுரேஷ் - சென்னை

First published:

Tags: Chennai, Crime News