ஹோம் /நியூஸ் /சென்னை /

விமானம் வெடித்து சிதறும்.. மர்மநபரின் இ-மெயிலால் சென்னை விமான நிலையத்தில் பதற்றம்!

விமானம் வெடித்து சிதறும்.. மர்மநபரின் இ-மெயிலால் சென்னை விமான நிலையத்தில் பதற்றம்!

சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்

சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்

விமான பயணிகளுக்கு வழக்கத்தை விட கூடுதலாக ஒரு சோதனை நடத்தப்படுகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai [Madras] | Meenambakkam | Chennai

  சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் என  விமானநிலைய இயக்குநா் அலுவலகத்திற்கு வந்த இ-மெயிலால் பரபரப்பு ஏற்பட்டது.

  சென்னை விமான நிலைய இ-மெயில் முகவரியான apdchennai@aai.aeroக்கு மர்ம நபர் ஒருவர் வெடுகுண்டு மிரட்டல் மெயில் அனுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

  அதில் விமான நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கப் போகிறது.குறிப்பிட்ட ஒரு மா்மநபர் விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருக்கிறாா். அவரது உடமையில் வெடிகுண்டு உள்ளது. எனவே அந்த மா்ம நபா் பயணிக்கும் விமானத்திற்கு ஆபத்து உள்ளது என்று மெயிலில் குறிப்பிட்டிருந்தது. ஆனால் எத்தனை மணி? உள்நாட்டு விமான நிலையமா? சா்வதேச விமான நிலையமா? என்று எந்த தகவலும் இல்லை. அதோடு போலியா ஐடி உருவாக்கி, அதிலிருந்து இந்த மெயில் வந்திருந்தது. ஆனாலும் சென்னை விமான நிலையத்தில், இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

  சென்னை விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக, விமான பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள், தீவிரவாதிகளை கண்காணிக்கும் கியூ பிரிவு போலீசாா், தமிழக உயா் போலீஸ் அதிகாரிகள் ஆகியோருக்கு அவசர தகவல் அனுப்பினா். அதோடு டெல்லியில் உள்ள டைரக்டா் ஜெனரல் ஆப் சிவில் ஏவியேஷன், BCAS, வெடிகுண்டு நிபுணா்களுக்கும் தகவல் அளித்தனா்.

  அதோடு விமானநிலையத்திற்கு வந்த மெயிலில்,சென்னை விமான நிலையத்தில் குண்டு வெடிக்கும் என்று குறிப்பிடப்பட வில்லை. பொதுவாக விமானத்தில் குண்டு வெடிக்கும் என மட்டும் குறிப்பிட்டிருந்தது. இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு ஆய்வு செய்ததில்,வெளிநாடு செல்லும் பயணி ஒருவரை தடுத்து நிறுத்து வதற்காக வந்த மெயிலாக இருக்கலாம் என்று தெரியவந்தது.

  இதையும் படிங்க | ஊராட்சி தலைவர் வெட்டிப் படுகொலை.. சென்னை அருகே நடந்த கொடூரம்!

  இருப்பினும் சென்னை விமான நிலையம், விமானத்தில் பயணிக்க வரும் பயணிகள், காா் பாா்க்கிங் உட்பட அனைத்து பகுதிகளிலும் மத்திய தொழில்பாதுகாப்பு படையைச் சேர்ந்த வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.

  விமான பயணிகளுக்கு வழக்கமாக 3 அடுக்கு சோதனைகள் நடக்கும். தற்போது கூடுதலாக, மேலும் ஒரு சோதனை நடத்தப்படுகிறது. வெடிகுண்டு மிரட்டலால் விமான மிகுந்த பதற்றம் ஏற்பட்டுள்ளது.

  இதற்கிடையே சென்னை விமான நிலைய போலீசாா், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனா்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Chennai Airport, Hoax bomb threat call