ஹோம் /நியூஸ் /சென்னை /

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாஜக அரசு திருத்த நினைக்கிறது - ப.சிதம்பரம் பரபரப்பு குற்றசாட்டு

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாஜக அரசு திருத்த நினைக்கிறது - ப.சிதம்பரம் பரபரப்பு குற்றசாட்டு

ப. சிதம்பரம்

ப. சிதம்பரம்

இந்து மகா சபை, பாரதிய ஜனசங்கம், பாஜக உள்ளிட்ட யாருமே அரசியல் சாசன வடிவமைப்பில் உறுப்பினர் கிடையாது. அவர்களது பங்களிப்பு இல்லாத காரணத்தால் இதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தெரிவிக்கின்றனர்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மத்திய பாஜக அரசு திருத்தி அமைக்கவும் அழிக்கவும் நினைக்கின்றது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடத்தப்படும் இந்திய அரசியலமைப்பு பாதுகாப்பு நடைபயணம் தொடக்க விழா இன்று சென்னை சத்திய மூர்த்தி பவனில் நடைபெற்றது. 3 நாட்கள் 75 கிலோ மீட்டர் நடைபெறும் இந்த நடைபயனமானது சென்னை சத்திய மூர்த்தி பவனில் தொடங்கி அண்ணாசாலை, ஜிம்சன், பெரியார் திடல், புரசைவக்கம், செனாய் நகர், கோயம்பேடு, அம்பத்தூர், ஆவடி, மதுரவயல், பூந்தமல்லி வழியாக 3வது நாள் ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி நினைவிடத்தை அடையும்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முன்னாள் மத்திய  அமைச்சர்கள் ப.சிதம்பரம், திக் விஜய் சிங், சல்மான் குர்ஷித், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை, முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், திருநாவுக்கரசர், கே.வி.தங்கபாலு ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய மக்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் கட்சி, டாக்டர் அம்பேத்கரை நியமித்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியது.

சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் ஒற்றுமையையும் இந்த அரசியல் அமைப்பு சட்டம் வலியுறுத்துகிறது. நம் நாடு ஒரு மொழி ஒரு கலாச்சாரம் ஒரு மதம் என்ற அடிப்படையில் கிடையாது பல்வேறு மொழிகள் பல்வேறு மதங்கள் உடைய நாடு ஆகவே அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் தற்போது பாஜகவும் ஆர்எஸ்எஸும் இந்த அரசியல் அமைப்பு சட்டத்தை சிதைக்க பார்க்கின்றனர் என தெரிவித்தார்.

அவரை தொடர்ந்து பேசிய முன்னாள் மத்திய அமைச்சரும் நாடாளுமன்ற உருப்பினருமான ப.சிதம்பரம், “அரசியலமைப்பு சட்டத்தை இயற்றிய அண்ணல் அம்பேத்கர் தலைமையிலான குழுவில், 70 பேரில் இருவர் தமிழர் என்பது நம் பெருமை. அவர்கள் மல்லாடி கிருஷ்ணசாமி, என்.கோபால்சாமியும் ஆவர். நாடாளுமன்ற  படியை தொட்டு வணங்கி விட்டு, மைய அவையில் அரசியல் சாசன நூலை வணங்கி விட்டு பிரதமராக மோடி பதவியேற்று 8 ஆண்டுகளாக செயல்படுகிறார். அரசியல் சாசன நூலை வணங்கிவிட்டு பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார் என்பதற்காக இந்த அரசியல் சாசனம் மீது அவருக்கு நம்பிக்கை உள்ளது என்று மட்டும் நினைத்து விடாதீர்கள்.

இந்து மகா சபை, பாரதிய ஜனசங்கம், பாஜக உள்ளிட்ட யாருமே அரசியல் சாசன வடிவமைப்பில் உறுப்பினர் கிடையாது. அவர்களது பங்களிப்பு இல்லாத காரணத்தால் இதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தெரிவிக்கின்றனர். ஆகையால் அரசியல் சாசனத்தை சிதைக்கிறார்கள் அழிக்கிறார்கள்.

இதையும் வாசிக்க: இந்தியன் ரயில்வே தக்கல் டிக்கெட்டுகளில் மாபெரும் மோசடி..டாப் செல்லர் சைபர் குற்றவாளி கைது.

பாஜகவிற்கு, நாடாளுமன்ற மாநிலங்களவை 3ல் இரண்டு பங்கு ஆதரவு, பெருபான்மை இல்லை. இந்த தடை மட்டும் இல்லையென்றால் அரசியல் சாசனத்தை மாற்றியிருப்பார்கள். பெரும்பான்மை பெற்றால் அரசியல் அமைப்பின் அடிப்படையாக இருக்கும் ஆர்டிகில் 14, 19, 21, 25, 26 ஆகிய 5 சரத்துகளை நிச்சயமாக திருத்தும், அழிக்கும், சிதைக்கும்" என தெரிவித்தார்.

Published by:Siddharthan Ashokan
First published:

Tags: BJP, Congress leader, P.chidambaram