தமிழ்நாட்டில் கோயில் சொத்துகள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை கண்டித்து பாஜக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் பங்கேற்றனர்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக ஆன்மீக ஆலய மேம்பாட்டு பிரிவு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் அப்பிரிவின் துணைத்தலைவர் நாச்சியப்பன், லியோ சுந்தரம், கண்ணபரமாத்மா, கோவிந்தசாமி உள்ளிடோர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
மேலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், கனல் கண்ணன், வேலூர் இப்ராகிம், கேசவ விநாயகன், வி.பி.துரைசாமி, கருநாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.
அதில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, “இந்து கோயில்களை அறநிலையத்துறை மேற்பார்வையிடலாம் ஆனால் நிர்வாகம் செய்யக்கூடாது. குத்தகை என்ற பெயரில் கோவில் நிலங்கள் தாரை வார்க்கப்படுவதை தடுக்க வேண்டும்.
இந்து கோயில்களுக்கு 4 லட்சம் ஹெக்டேர் சொத்துக்கள் உள்ளன. ஆண்டுதோறும் சொத்து விபரங்களை பட்டியலிட வேண்டும். ஆகம விதிமுறைகளில் அரசு தலையிட கூடாது. அறங்காவலர்களாக அரசியல் சார்பற்றவர்களை நியமிக்க வேண்டும். மீட்கப்பட்ட சாமி சிலைகளை அருங்காட்சியகங்களில் வைக்கக்கூடாது.
பாஜக ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்தே அறநிலையத்துறையை நீக்குவதுதான். தமிழ்நாட்டில் சாதியை வைத்து திமுக அரசியல் செய்து வருகிறது” என கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BJP, Hindu Temple, Protest