முகப்பு /செய்தி /சென்னை / தமிழ்நாடு பாஜகவுக்கு அடுத்த ஷாக்... பாஜக ஐடி விங் செயலாளரும் ராஜினாமா!

தமிழ்நாடு பாஜகவுக்கு அடுத்த ஷாக்... பாஜக ஐடி விங் செயலாளரும் ராஜினாமா!

திலீப் கண்ணன்

திலீப் கண்ணன்

இத்தனை காலம் என்னோடு பயனித்த பாஜகவினர் அனைவருக்கும் மிக்க நன்றி. கனத்த இதயத்துடன் விடைபெறுகிறேன் - திலீப் கண்ணன்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

தமிழ்நாடு பாஜகவின் ஐடி பிரிவு மாநில செயலாளர் திலிப் கண்ணன் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். நேற்று பாஜக ஐடி பிரிவு தலைவர் சிடிஆர் நிர்மல்குமார் விலகிய நிலையில் தற்போது மேலும் ஒரு முக்கிய நிர்வாகி விலகியுள்ளார்.

தமிழ்நாடு பாஜகவின் சமூக ஊடக பிரிவு தலைவராக இருந்தவர் சிடிஆர் நிர்மல் குமார். இந்த நிலையில் நேற்று திடீரென்று கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பலநூறு முறை சிந்தித்து இன்று நான் பாஜவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன். பல ஆண்டுகளாக எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உண்மையாக, நேர்மையாக கட்சியின் வளர்ச்சிக்காக என்னால் முடிந்த வரை பணியாற்றினேன் இன்று விடைபெறுகிறேன்” என்று குறிப்பிட்டார். இதனை தொடர்ந்து அவர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

இந்நிலையில் பாஜக ஐடி பிரிவு மாநில செயலாளர் திலீப் கண்ணன், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை மீது அடுக்கடுக்காக குற்றசாட்டி ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதில் “இத்தனை காலம் என்னோடு பயணித்த பாஜக ஆதரவாளர்கள், பாஜக நண்பர்கள், பாஜக அனுதாபிகள் அனைவருக்கும் மிக்க நன்றி. கனத்த இதயத்துடன் விடைபெறுகிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.

First published:

Tags: Annamalai, BJP, Bjp party men