முகப்பு /செய்தி /சென்னை / சைபர் க்ரைம் குற்றம்... பாஜக நிர்வாகி கல்யாணராமனுக்கு 163 நாட்கள் சிறை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சைபர் க்ரைம் குற்றம்... பாஜக நிர்வாகி கல்யாணராமனுக்கு 163 நாட்கள் சிறை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கல்யாணராமன்

கல்யாணராமன்

வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 163 நாட்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

சைபர் கிரைம் தொடர்ந்த அவதூறு வழக்கில் பாஜக நிர்வாகி கல்யாணராமனுக்கு 163 நாட்கள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இசுலாமியர்களுக்கு எதிராகவும் முகமது நபி குறித்தும் தொடர்ந்து அவதூறாக எழுதிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு பின் விடுதலையானார்.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையில் எழும்பூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 163 நாட்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்த வழக்கில் ஏற்கனவே அவர் கைது செய்யப்பட்டு 163 நாட்கள் சிறையில் இருந்துள்ளார். இதன் காரணத்தால் 163 நாட்கள் கழிக்கப்பட்டு அவர் விடுவிக்கப்பட்டார்.

சைபர் க்ரைம் வழக்கில் வெறுப்பு பேச்சுக்காக குற்றம்சாட்டப்பட்டவருக்கு தண்டனை வழங்கப்பட்டது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Arrested, BJP, Chennai