ஹோம் /நியூஸ் /Chennai /

பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதாமணி கைது.. மதக்கலவரத்தை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு

பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதாமணி கைது.. மதக்கலவரத்தை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு

சவுதாமணி

சவுதாமணி

சென்னை  சூளைமேட்டில் உள்ள சவுதாமணி  வீட்டில் வைத்து அவரை சைபர் கிரைம் போலீசார் இன்று  கைது செய்துள்ளனர். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

சமூக வலைத்தள பக்கத்தில் மதக்கலவரத்தை தூண்டும் விதத்தில் பதிவிட்டதாக பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதாமணி சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

தமிழ்நாடு பாஜக-வின் செயற்குழு உறுப்பினராக பொறுப்பு வகித்து வரும் சவுதாமணி (Sowdhamani) தனது ட்விட்டர் பக்கத்தில்  மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பதிவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. அவரது இந்த நடவடிக்கைக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர். மேலும், மதக்கலவரத்தை தூண்டும் வீடியோவை பகிர்ந்த அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தினர்.

இதையடுத்து, அவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதாமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். எனினும் இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மேலும் படிக்க: மதத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் ஆன்மீக வியாதிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

இந்நிலையில், சென்னை  சூளைமேட்டில் உள்ள சவுதாமணி  வீட்டில் வைத்து அவரை சைபர் கிரைம் போலீசார் இன்று  கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சவுதாமணியை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

First published:

Tags: BJP, Chennai Police, Cyber crime