பாஜக மாநில செயலாளர் உள்பட முக்கிய நிர்வாகிகள் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் மாற்றுக்கட்சியினர் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பா.ஜ.க. தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில், பா.ஜ.க. மாநிலச் செயலாளர் சி.கே.தீனா மற்றும் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளர் எம்.திவ்யா மகேந்திரன் ஆகியோர் தலைமையில் பா.ஜ.க. மாவட்ட நிர்வாகிகள் – மாவட்ட அணி நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்.
இதுகுறித்து திமுக வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-
“தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில், இன்று (24.12.2022) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், பா.ஜ.க. மாநிலச் செயலாளர் சி.கே.தீனா மற்றும் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளர் எம்.திவ்யா மகேந்திரன் ஆகியோர் தலைமையில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பா.ஜ.க.வைச் சேர்ந்த மாவட்ட துணைத் தலைவர் சிவராமன், மாவட்ட துணைச் செயலாளர் ஏ.எம்.முருகன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் மகேந்திரன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் சையத் ஹேசான் – அமைப்புசாரா தொழிலாளர் அணி மாவட்டச் செயலாளர் ஏ.எஸ்.மாரியப்பன், பர்கூர் ஒன்றிய இளைஞர் அணி துணைத்தலைவர் என்.பாலாஜி, ஊத்தங்கரை விவசாய அணி ஒன்றியச் செயலாளர் சிவாஜி, காவேரிப்பட்டிணம் ஒன்றிய ஓ.பி.சி. அணி செயலாளர் எஸ்.செந்தில்குமார், கிருஷ்ணகிரி நகர மாணவர் அணித் தலைவர் கே.எம்.தினேஷன் ஆகியோர் பா.ஜ.க.விலிருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தனர்.
இதையும் படிக்க : எடப்பாடி பழனிசாமி அனுப்பியது டம்மி நோட்டீஸ்.. ஓபிஎஸ் அதிரடி பேச்சு!
அப்போது, கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, இராணிப்பேட்டை மாவட்டக் கழகச் செயலாளர் இராணிப்பேட்டை ஆர்.காந்தி, திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளர் மாண்புமிகு எ.வ.வேலு, செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளர் தே.மதியழகன், எம்.எல்.ஏ., தலைமை நிலைய அலுவலகச் செயலாளர்கள் துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன், மாநில விவசாய அணி துணைச் செயலாளர் டேம் வெங்கடேசன் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் டி.ஏ.நாகராஜ், மாவட்ட பொருளாளார் ப.கதிரவன், ஒன்றியச் செயலாளர்கள் வி.ஜி.ராஜேந்திரன், பி.கோவிந்தன், டி.தனசேகரன், குண வசந்தரசு, எம்.அறிஞர், எஸ்.குமரசேன் ஆகியோர் உடனிருந்தனர்”
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BJP, BJP cadre, DMK, DMK cadres