பாஜகவிலிருந்து சென்று திராவிட கட்சிகளை வளர்க்கும் நிலை உருவாகியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், என்னுடைய முடிவுகளில் பாரபட்சமும் இருக்காது தலைவர்கள் முடிவெடுப்பதில் நான்கு பேர் கோபித்துக் கொண்டு வெளியே போக தான் செய்வான். அண்ணாமலையான நான் லீடர் லீடர் மாதிரி தான் முடிவெடுப்பேன் மேனேஜர் மாதிரி முடிவெடுக்க மாட்டேன் அது என் கட்சி தொண்டர்களுக்கு அழகல்ல.
நான் இங்கு இட்லி தோசை சாப்பிட வரவில்லை அம்மையார் ஜெயலலிதா, கருணாநிதி போல் நானும் ஒரு தலைவர். நான் எடுக்கும் முடிவில் உறுதியாக இருக்கிறேன். திராவிட கட்சிகளில் இருந்து பாஜகவுக்கு வந்து பாஜகவை வளர்க்க வேண்டும் என்ற நிலை மாறி பாஜகவில் இருந்து சென்று திராவிட கட்சிகளை வளர்க்க வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.
லட்சக்கணக்கான தொண்டர்களின் தலைவன் நான் கட்சி வளர்ச்சிக்கு எந்த முடிவு எடுக்க வேண்டுமோ துணிந்து எடுத்துக் கொண்டே இருப்பேன் வரும் காலத்தில் இன்னும் வேகம் அதிகரிக்குமே தவிர குறையாது. விலகி சென்று விவசாயம் பண்ண போவதில்லை இன்னொரு தலைவன் கீழ போய் உட்கார்ந்து அந்த தலைவன் வாழ்க என கோஷம் தான் போட போகிறார்கள் என கூறினார்.
மேலும், தமிழகத்தின் அதிமுக திமுக கட்சிகளில் இருந்து பெரும் தலைவர்கள் விலகி மாற்றுக் கட்சியில் இணையும் பொழுது எப்படி அந்த கட்சியின் தலைவர் கருணாநிதியோ, ஜெயலலிதாவோ முடிவு எடுத்தார்களோ, அதே போல் நானும் ஒரு தலைவன் தலைவனாகவே முடிவெடுப்பேன். தலைவன் எடுக்கும் முடிவில் விலகி செல்பவர்கள் அவர்களின் விருப்பப்படி விலகி செல்லட்டும். அதற்கு நான் ஒருபோதும் பின்வாங்க போவதில்லை எனவும் கூறினார்.
பாரதிய ஜனதா கட்சியின் மேனேஜர் போல் அமர்ந்து இரண்டு இட்லி தோசை சாப்பிட்டு விட்டு செல்வதற்காக நான் இந்த பொறுப்பிற்கு வரவில்லை. மூன்றாவது கியரில் மெதுவாக பயணிப்பதாகவே நான் இப்பொழுது கருதுகிறேன். நிச்சயமாக 2024 தேர்தலுக்கு முன்பு ஐந்தாவது கியர் செல்லும் வேகத்தில் பயணிப்பேன் என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், முதலமைச்சரை முதலில் நன்றாக தூங்க விடுங்கள் அவர் தூங்கி எழும்பொழுது என்ன பிரச்சனைகள் இருக்குமோ என்ற அச்சத்திலே மறுநாள் தூங்க செல்வதனால் சரியாக தூங்காமல் இருக்கிறார். அதனாலே இப்படி போன்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார் அவரை தெளிவாக நீங்கள் தூங்க விட்டால் மறுநாள் தெளிவா பேச ஆரம்பித்து விடுவார். முதலமைச்சர் ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் தமிழக அரசியலில் ஜாதியையும் மதத்தையும் கலந்த பெருமையை திமுக தலைமைச் சாரும்.
முதல் அமைச்சருக்கு எதைப் பார்த்தாலும் பயமாக இருக்கிறது. அதற்கு அண்ணாமலை ஒன்றும் செய்ய முடியாது. சினிமாவில் துணை நடிகர்கள் நடிகர்களை பெரியவர் திறமைசாலி என்று புகழ்வது போல திமுகவின் மேடைகளில் நான்கு நடிகர்களை வைத்துக்கொண்டு முதலமைச்சர் திறமைசாலி வல்லவர் என்று பேசுவதால் பாஜக பயப்படாது. இந்தியாவில் இருக்கும் இரண்டாம் கட்ட தலைவர்களை அழைத்து வந்து ஸ்டாலின் அவர்களை புகழ்ந்து பேசுவதனால் பாஜக ஒருபோதும் பயப்படாது. இதை தமிழக மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என பேசினார்.
பாஜகவில் இருந்து பிரிந்து அதிமுகவில் இணைந்ததனால் பாஜகவிற்கும் அதிமுகவிற்கும் இருக்க கூட்டணியில் பிளவு ஏற்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு. அதற்கான நேரமும் காலமும் வரும் பொழுது பேசுவோம் என கூறினார். ஜெயலலிதா கருணாநிதி போன்று நானும் தமிழகத்தின் ஒரு தலைவர் தலைவராக இருப்பவன் தலைவராகத்தான் முடிவெடுப்பான். ஜெயலலிதா அம்மையாரின் முடிவு எப்படி இருக்குமோ, அதேபோல் தான் என்னுடைய முடிவுகளும் இருக்கும். பயமோ, யாரின் காலில் விழுவதோ என்னிடம் இருக்காது. என்னுடைய முடிவுகளில் பாரபட்சமும் இருக்காது. தலைவர்கள் முடிவெடுப்பதில் நான்கு பேர் கோபித்து கொண்டு வெளியே போக தான் செய்வார்கள். இதே போல் திமுகவிலோ அதிமுகவிலோ நிறைய நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. கட்சி வளர்ச்சிக்கு எந்த முடிவு எடுக்க வேண்டுமோ, அதை நான் துணிந்து எடுத்துக் கொண்டே இருப்பேன் என தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Annamalai, BJP, Chennai Airport, CM MK Stalin, Tamil Nadu