Home /News /chennai /

பழவந்தாங்கலில் இருந்து விமான நிலையம் வரை மோட்டார் சைக்கிளில் தேசிய கொடியுடன் பேரணி சென்ற மத்திய தொழிற்படை போலீசார்...

பழவந்தாங்கலில் இருந்து விமான நிலையம் வரை மோட்டார் சைக்கிளில் தேசிய கொடியுடன் பேரணி சென்ற மத்திய தொழிற்படை போலீசார்...

தேசியக் கொடி பேரணி

தேசியக் கொடி பேரணி

Chennai | சென்னையில் 100 மோட்டார் சைக்கிளில் மத்திய தொழிற்படை போலீசார் தேசிய கொடியை பிடித்த படி பேரணியாக சென்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் உள்ள மத்திய தொழிற்படை போலீசார் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிள் பேரணி நடந்தது. 100 மோட்டார் சைக்கிளில் மத்திய தொழிற்படை போலீசார் தேசிய கொடியை பிடித்த படி பேரணியாக சென்றனர்.

    பேரணியை விமான நிலைய ஆணையக இயக்குனர் சரத்குமார், மத்திய தொழிற்படை போலீஸ் டி.ஐ.ஜி. ஸ்ரீராம் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். தேசிய கொடியுடன் மோட்டார் சைக்கிள் பேரணி பழவந்தாங்கல் மத்திய தொழிற்படை குடியிருப்பில் இருந்து தொடங்கி ஜி.எஸ்.டி. சாலை வழியாக மீனம்பாக்கம், திரிசூலம் பல்லாவரம் சென்று விமான நிலையத்திற்கு வந்தது.

    Also see...புதுக்கோட்டை தயாராகும் 5 லட்சம் தேசியக் கொடிகள்

    தேசியக் கொடியுடன் சென்ற பைக் பேரணி


    பன்னாட்டு முனையம், உள்நாட்டு முனையம் ஆகியவற்றில் சுற்றி விட்டு பழவந்தாங்கல் வந்தடைந்தது. இந்த பேரணியை பொதுமக்கள் கண்டு களித்தனர்.

    செய்தியாளர்: சுரேஷ், விமானநிலையம்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Chennai

    அடுத்த செய்தி