Home /News /chennai /

டிஜிட்டல் தடுப்பூசியின் பயன்பாடு என்ன?

டிஜிட்டல் தடுப்பூசியின் பயன்பாடு என்ன?

டிஜிட்டல் தடுப்பூசியின் பயன்பாடு என்ன?

டிஜிட்டல் தடுப்பூசியின் பயன்பாடு என்ன?

digital vaccine | டிஜிட்டல் வாக்சின் எனப்படுவது 2 முதல் 18 வயதிலான குழந்தைகளுக்கு உணவு பழக்கத்தை சீர் படுத்த உதவுகிறது என சோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

உடலில் நேரடியாக மருந்தை செலுத்தி நோயை தடுக்கும் தடுப்பூசிகள்தான் நமக்கு தெரிந்தவை. ஆனால் தற்போது மூளையில் சில தேவையான எதிர்வினைகளை ஏற்படுத்தி அதன் மூலம், மனிதரின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி நோயை தடுக்கும் வகையிலான டிஜிட்டல் வாக்சின் எனப்படுபவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க வாழ் தமிழர் பார்கவ் ஸ்ரீ பிரகாஷ் டிஜிட்டல் வாக்சினுக்கான காப்புரிமையை அமெரிக்கா காப்புரிமை சங்கத்திடமிருந்து பெற்றுள்ளார். இந்த டிஜிட்டல் வாக்சின் எனப்படுவது 2 முதல் 18 வயதிலான குழந்தைகளுக்கு உணவு பழக்கத்தை சீர் படுத்த உதவுகிறது என சோதனைகள் மூலம் நிரூபித்து இந்த காப்புரிமை பெறப்பட்டுள்ளது.

பார்கவ் ஸ்ரீ பிரகாஷ்


Fooya எனும் கேமிங் ஆப் தரவிறக்கம் செய்து அதில் விளையாடும் போது குழந்தைகளின் நிஜ வாழ்வில் உணவு பழக்கம் குறித்த நேர்மறையான விளைவுகள் ஏற்படுவதாக பார்கவ் ஸ்ரீ பிரகாஷ் கூறுகிறார். இது மெடாவர்ஸ் எனப்படும் மெய்நிகர் உலகில் விளையாடப்படும் விளையாட்டுகள் ஆகும். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு avatar இருக்கும்.

குழந்தை அந்த ஆப்ல் விளையாடும் போது தேர்ந்தெடுக்கும் உணவுகளுக்கு ஏற்ப அந்த avatarல் விளைவுகள் ஏற்படும். இதை தொடர்ந்து விளையாடும் போது குழந்தையின் நிஜ வாழ்க்கையில் உணவு பழக்கத்தில் மாற்றங்கள் ஏற்படுவதாக பார்கவ் ஸ்ரீ பிரகாஷ் கூறுகிறார். ஒரு வாரத்துக்கு அரை மணி நேரம் மட்டுமே அதிகபட்சமாக இந்த ஆப் ஐ பயன்படுத்த வேண்டும்.

இந்த ஆப் ஐ தற்போது சென்னை விஎச்எஸ் மருத்துவமனையில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உணவு பழக்க கட்டுப்பாடுகள் ஏற்படுத்த முடியுமோ என கண்டறிய சோதனைகள் தொடங்கவுள்ளன. மரபியல் காரணங்களுக்காக ஏற்படும் சர்க்கரை நோய் வகை 1 என கூறப்படுகிறது. ஆரோக்கியமற்ற  வாழ்க்கை முறை காரணமாக ஏற்படுவது வகை 2 என கூறப்படுகிறது.

Also see... கர்ப்பப்பை வாய் புற்றுநோய் : பெண்கள் கவனிக்க வேண்டிய 10 அறிகுறிகள்...

பொதுவாக குழந்தைகளில் வகை 1 சர்க்கரை நோய் தான் அதிகம் காணப்படும். ஆனால் தற்போது வகை 2 சர்க்கரை நோயும் குழந்தைகளில் அதிகமாக காணப்படுகிறது. எனவே குழந்தைகளில் சர்க்கரை நோய் கட்டுப்படுத்தும் வகையிலான உணவு பழக்கங்களை உருவாக்க இந்த ஆப் உதவும் என விஎச்எஸ் மருத்துவமனையின் உட்சுரப்பியல் மருத்துவர் ( endocrinologist) உஷா ஸ்ரீராம் கூறுகிறார்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Vaccine

அடுத்த செய்தி