Home /News /chennai /

புரட்டாசி மாதம் தொடக்கம் - களையிழந்த காசிமேடு மீன் மார்க்கெட்

புரட்டாசி மாதம் தொடக்கம் - களையிழந்த காசிமேடு மீன் மார்க்கெட்

மீன் மார்க்கெட்

மீன் மார்க்கெட்

Chennai: புரட்டாசி மாத முதல் நாளே ஞாயிற்றுக்கிழமையாக அமைந்ததையொட்டி சென்னை காசிமேடு சந்தை களையிழந்து காணப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    இந்துக்களின் கடவுளான விஷ்ணுவிற்கு உகந்த மாதமாக புரட்டாசி மாதம் பார்க்கப்படுகிறது. இந்நாளில் பெரும்பான்மையான இந்துக்கள் அசைவம் உண்ணாமல் விரதம் இருந்து வழிபடுவது வழக்கம். இந்நிலையில் புரட்டாசி மாத முதல் நாளே ஞாயிற்றுக்கிழமையாக அமைந்ததையொட்டி சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகமானது குறைந்த அளவில் கூட்டத்துடனேயே காணப்பட்டது

    நள்ளிரவு 2மணி முதல் தொடங்கிய இந்த விற்பனையில் மொத்த"வியாபாரிகள் சில்லறை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலதரப்பட்டவர்கள் ஆர்வம் காட்டுவார்கள் ஆனால் புரட்டாசி விரத நாள் தொடக்கமானது விடுமுறை நாளான ஞாயிற்று கிழமையில் தொடங்கியதால் எப்போதும் அசைவ பிரியர்களின் கட்டுபாட்டில் சூழப்பட்டிருக்கும் இந்த காசிமேடு ஏலக்கூடமானது இன்று குறைந்த அளவில் மக்கள் நடமாட்டத்தை கொண்டு களையிழந்தே காணப்பட்டது.

    Read More: யானைகள் வழித்தடத்தில் உள்ள சட்டவிரோத செங்கற் சூளைகளை அகற்ற உத்தரவிடப்படும் - தமிழக அரசு

    கடந்த வாரத்தை காட்டிலும் மீன்களின் விலை கணிசமாக குறைந்துள்ள போதிலும் மீன்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை என விசைப்படகு உரிமையாளர்கள் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

    மீன்கள் விலை விவரம்:

    வஞ்சிரம் கிலோ ரூ.800 முதல் ரூ.900

    நாயாறல் கிலோ ரூ.600- ரூ.700

    கொடுவா கிலோ ரூ.500

    பர்லா கிலோ ரூ.200

    பாறை கிலோ ரூ.250

    சங்கரா ரூ.200 முதல்

    கடம்மா கிலோ ரூ.400 முதல்

    நெத்திலி கூடை ரூ.1500 முதல் ரூ.2000

    இறால் நண்டு போன்றவை ரூ.450 முதல் ரூ.650வரையும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

    கடந்த வாரம் மீன்கள் விலை விவரம்:

    வஞ்சிரம் கிலோ ரூ.1200 முதல் ரூ.1500

    நாயாறல் கிலோ ரூ.900

    கொடுவா கிலோ ரூ.800 முதல் ரூ.1000 வரையும்

    பர்லா கிலோ ரூ.350

    பாறை கிலோ ரூ.250

    சங்கரா ரூ.400 முதல்

    கடம்மா கிலோ ரூ.400 முதல்

    நெத்திலி கிலோ ரூ.400 முதல் விற்பனையானது.

     
    Published by:Srilekha A
    First published:

    Tags: Chennai, Fish, Kasimedu

    அடுத்த செய்தி