Home /News /chennai /

மெட்ரோ ரயில் நிலையத்தில் திருநங்கைகளால் வரையப்பட்ட அழகிய ஓவியங்கள்...

மெட்ரோ ரயில் நிலையத்தில் திருநங்கைகளால் வரையப்பட்ட அழகிய ஓவியங்கள்...

திருநங்கைகளால் வரையப்பட்ட ஓவியங்கள்

திருநங்கைகளால் வரையப்பட்ட ஓவியங்கள்

சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் திருநங்கைகளால் வரையப்பட்ட அழகிய ஓவியங்கள் சாலையில் செல்வோரை கவர்ந்து இழுக்கின்றன. கடந்து செல்பவர்களை ஒரு முறையேனும் திரும்பிப்பார்க்க வைக்கும் இந்த ஓவியங்களை வரைந்த திருநங்கைகள் குறித்து ஒரு செய்தி தொகுப்பு...

மேலும் படிக்கவும் ...
    மற்றவர்களுக்கு எந்த விதத்திலும் தாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில், தமிழ்நாட்டில் திருநங்கைகள் பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர். அந்த வகையில், ஓவியக்கலையும் தங்களுக்கு கைவந்ததுதான் என்பதை வரைந்து காட்டி பொதுமக்களை அசர வைத்துள்ளனர். ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலைய சுவர்களில், ஐந்திணைகளாகிய குறிஞ்சி, முல்லை, நெய்தல், பாலை, மருதம் ஆகியவற்றைக் குறிக்கும் வகையில், அவர்கள் வரைந்த ஓவியங்கள் அவ்வழியாக செல்லும் பொதுமக்களின் கண்களை குளிரூட்டும் வகையில் அமைந்துள்ளது.

    பல அடி உயரம் கொண்ட சுவற்றில் அசால்ட்டாக அந்தரத்தில் தொங்கியபடி இவர்கள் தீட்டும் ஓவியங்களை சாலையோரம் செல்லக்கூடிய பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தினசரி வியந்து பார்த்த வண்ணம் சென்று வருகின்றனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த திருநங்கை ஆர்ட் புராஜெக்ட் அமைப்பைச் சேர்ந்த திருநங்கை காஞ்சனா, பல ஆண்டுகளாக மேடை நடன நிகழ்ச்சிகளில் பணியாற்றி வந்ததாகவும், இந்த அமைப்பு சார்பில் ஓவியம் வரைய பயிற்சி அளிக்கப்பட்டு பல்வேறு நகரங்களில் ஓவியம் வரைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

    Also see... சோதனைசாவடியில் குறட்டைவிட்டு தூக்கிய காவலர்..

    இந்த சமூகத்தில் இன்றும் பல அவமானங்கள், ஒதுக்குதல்கள் போன்றவற்றை திருநங்கைகள் சந்தித்து வருவதாகவும், இதனையும் தாண்டி தங்களால் முடியும் என்று சாதித்துக் காட்டி வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் பொதுமக்கள் தங்களை ஊக்கப்படுத்தினால் திருநங்கைகள் தங்களை மாற்றிக் கொள்ள முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் மற்றொரு ஓவிய கலைஞரான ஸ்மித்தா அபிமுக்தா.


    திருநங்கைள் என்றாலே வேறு ஒரு பார்வை உள்ளது. இந்த பார்வையை உடைக்கும் வகையில், தங்களாலும் சாதித்து காட்ட முடியும் என்பதற்காக இக்கலையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டதாக கூறும் திருநங்கைகள், தங்களுக்கு உரிய அங்கீகாரத்தை அளிக்கும் வகையில் அரசு இதுபோன்ற வாய்ப்புகளை தொடர்ந்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Chennai

    அடுத்த செய்தி