ஹோம் /நியூஸ் /Chennai /

தமிழகத்தில் 8 பேருக்கு BA5 வகை கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் 8 பேருக்கு BA5 வகை கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்

ராதாகிருஷ்ணன்

ராதாகிருஷ்ணன்

தமிழ்நாட்டில் முதல் முறையாக BA5 உறுதி செய்யப்பட்டுள்ளது. தெலங்கானா, மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது.  

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் புதிய கட்டிடங்களை ஆய்வு செய்த சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.  அவர் பேசுகையில், “வழக்கமான மரபணு பகுப்பாய்வுக்கு 139 மாதிரிகள் அனுப்பப்பட்டன. இதில் 8 பேருக்கு BA5 வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.4 பேருக்கு BA 4 வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவை இரண்டுமே ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் ஆகும்.

தமிழ்நாட்டில் முதல் முறையாக BA5 உறுதி செய்யப்பட்டுள்ளது. தெலங்கானா, மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் 8 பேரும் குணமடைந்து விட்டனர். கொரோனா நோயாளிகள் 790 பேரில் 46 பேர் தற்போது தமிழ்நாட்டில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 16 பேர் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சையில் உள்ளனர். இதில் 6 பேர் ஐ சி யுவில் உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் ஒளிவு மறைவு இன்றி செயல்பட்டு வருகிறது. மிக மிக குறைவான விலையில் தான் மருந்து பொருட்கள் வாங்குகிறார்கள். தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்திடம் தகவல் கேட்கப்படும். இந்த ஆண்டுக்கான டெண்டர் முடிந்ததா என்று தெரியவில்லை. அதை உறுதி செய்து விட்டு பதில் கூறுகிறேன். குழந்தைகளுக்கான உணவையும் தாய்மார்களின் உணவையும் மாற்றி ஒப்பிடக் கூடாது.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

First published:

Tags: Chennai, Corona, Covid-19, Radhakrishnan, Tamil Nadu