ஹோம் /நியூஸ் /சென்னை /

Surf Excel, ariel பெயரில் போலி சோப் பவுடர் தயாரித்து விற்பனை... 4 பேர் கைது

Surf Excel, ariel பெயரில் போலி சோப் பவுடர் தயாரித்து விற்பனை... 4 பேர் கைது

போலி சோப்பு பவுடர்

போலி சோப்பு பவுடர்

போலி தயாரிப்புகளை குறைந்த விலையில் விற்பனை செய்வதால் அதை வாங்கி பயன்படுத்துவோருக்கு கேன்சர், உள்ளிட்ட தோல் வியாதிகள் வரும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Avadi, India

  தமிழகம்  மற்றும் ட மாநிலங்களுக்கு விற்பனை செய்ய சென்னை செங்குன்றத்தில் போலி சோப்பு ஆலை நடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ. 1 கோடி மதிப்பிலான போலி சோப்பு பவுடர்கள், அதனை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

  சென்னை ஆவடி காவல் ஆணையரகம் செங்குன்றம் காவல் மாவட்டம் சோழவரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட  செங்குன்றம் எடப்பாளையம் சுற்று வட்டாரத்தில்  பிரபல அசல் நிறவனத்தின் பெயரில் போலி வாஷிங் பவுடர் மற்றும் லிக்விட் ரிட்டர்ஜெட் ஆகியவை தயாரிக்கப்பட்டு வருவதாக சோழவரம் காவல்நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

  இதையடுத்து, 10 க்கும் மேற்பட்ட தனிப்படை போலீசார். வெவ்வேறு இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது பிரபல நிறுவனத்தின் பெயரில் போலியாக வாஷிங் பவுடர் மற்றும் சோப்பு திரவம் தயாரித்து வந்தது தெரிய வந்தது.

  மொத்தம்  3 இடங்களில் அதிரடியாக சோதனை மேற்கொண்டு விசாரணை செய்த போது சாமானிய மக்கள் துணி துவைக்க பயன்படுத்தும் சோப்பு மூல பொருட்களை கொண்டு போலியான அசல் நிறுவன பெயர்களை கொண்டும் அச்சிடப்பட்ட Surf Excel Detergent powder, Ariel Detergent powder, Surf Excel Matic liquid ஆகியன டன் கணக்கில் தாயரித்திருப்பது தெரிய வந்தது.

  இதையும் படிங்க: ரேஷன் கடைகளில் வருகிறது புதிய நடைமுறை : அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

  இதனுடைய மதிப்பு சுமார் 1 கோடி  ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.  அதன் மூல பொருட்கள் மற்றும் அதனை பேக் செய்ய பயன்படும் கருவிகள் மற்றும் உபகரணங்கள் மற்றும் தானியியங்கி சோப்பு தயாரிக்கும் இயந்திரங்கள் ஆகியவற்றை கைப்பற்றிய போலீசார் 500 மூட்டை சோப்பு பவுடர், 50 கேன் சோப்பு திரவம், 6 பேக்கிங் இயந்திரங்களை  பறிமுதல் செய்தனர்.

  மேலும் போலி வாஷிங் பவுடர் தயாரித்து வந்த மேனேஜர் முகமது இப்ராஹிம், சூப்பர்வைசர் ரவி மற்றும் வடமாநில தொழிலாளர்கள் உள்ளிட்ட 15 பேரை கைது செய்து சோழவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள 15 பேரை  பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

  மேலும் படிக்க: விவசாயியிடம் ரூ.3,000 லஞ்சம் வாங்கிய  வி.ஏ.ஓ... பொறி வைத்து பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறையினர்..

  மேலும் இது போன்ற தமிழக அரசால் அங்கீகரிக்கப்படாத போலி தயாரிப்புகளை குறைந்த விலையில் விற்பனை செய்வதால் அதை வாங்கி பயன்படுத்துவோருக்கு கேன்சர், உள்ளிட்ட தோல் வியாதிகள் வரும் எனவும் இனி  இது போன்ற போலியான தயாரிப்புகளை நம்பி யாரும் வாங்க கூடாது எனவும் ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  செய்தியாளர்: பார்த்தசாரதி - ஆவடி

  Published by:Murugesh M
  First published:

  Tags: Avadi, Crime News, Soap