ஹோம் /நியூஸ் /சென்னை /

ATM-ல் காசு வரல அக்கவுண்ட்ல பணம் மிஸ்ஸிங்.. செல்லோ டேப் பயன்படுத்தி நூதன கொள்ளை - மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு

ATM-ல் காசு வரல அக்கவுண்ட்ல பணம் மிஸ்ஸிங்.. செல்லோ டேப் பயன்படுத்தி நூதன கொள்ளை - மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு

ஏடிஎம்-ல் நூதன கொள்ளை

ஏடிஎம்-ல் நூதன கொள்ளை

15 முறை ஏடிஎம்-ல் நூதன முறையில் ரூ.28,500 பணம் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India

நூதன முறையில் ஏடிஎம்-லிருந்து பணம் கொள்ளையடிக்கும் பல வழக்குகள் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சினிமா பாணியில் ஏடிஎம்-ல் கொள்ளையடித்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை அண்ணா சாலை கேசினோ திரையரங்கம் முன்பு உள்ள தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி ஏ.டி.எம்-ல் கடந்த ஜூலை மாதம் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கும் போது பணம் வராமலே டெபிட் ஆகியுள்ளது. இதனையடுத்து வாடிக்கையாளர்கள் வங்கி கிளையில் சென்று புகார் அளித்தனர்.

இதனையடுத்து வங்கி அதிகாரிகள் சிசிடிவி காட்சிகளை சோதனை செய்து பார்த்தபோது மர்ம நபர் ஒருவர் நூதனமான முறையில் பணம் எடுப்பது தெரியவந்தது. இந்த வகையில் மர்ம நபர் ஏ.டி.எம்.லிருந்து ரூ.28,500 பணம் எடுத்ததும் தெரியவந்தது. இந்நிலையில் தற்போது சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வங்கி அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர்.

Read More : கண்ணாமூச்சி விளையாடிய நல்லபாம்பு..பீரோவின் பின் படமெடுத்தபோது பொசுக்கென்று பிடித்த தீயணைப்பு துறையினர்..

புகாரின் பேரில் சிந்தாதிரிப்பேட்டை போலீசார் நூதன கொள்ளை குறித்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரணையில் மர்ம நபர் ஏ.டி.எம்-ல் பணம் வரும் பகுதியில் உள்பக்கமாக இரு பக்கம் ஒட்டும் செல்லோ டேப்பை ஒட்டி ஏ.டி.எம்-ல் வாசலில் நிற்பதும் பின் வாடிக்கையாளர் சென்று ஏ.டி.எம்-ல் பணம் எடுக்க செல்லும்போது பணம் வந்து செல்லோட்டோப்பில் உள் பக்கமாக ஒட்டிக்கொண்டு வெளியே வராமல் இருந்ததும் தெரிய வந்தது.

இந்த நிலையில் வாடிக்கையாளரின் பணம் வங்கியில் இருந்து டெபிட் ஆகும். ஆனால், ஏ.டி.எம்-ல் இருந்து பணம் வெளியே வராமல் பணம் எடுக்கும் பகுதிக்கு உள்ளேயே ஒட்டிக் கொண்டிருந்துள்ளது என போலீசார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பணம் வரவில்லை என்பதால் வாடிக்கையாளர் ஏ.டி.எம்-ஐ விட்டு வெளியே வந்தபின் வெளியே காத்திருக்கும் மர்ம நபர் ஏடிஎம்-க்குள் சென்று பணம் வரும் பகுதியில் இருக்கும் செல்லோ டேப்பை கவனமாக இழுத்து பணத்தை எடுத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று 15 முறை ஏடிஎம்-ல் நூதன முறையில் ரூ.28,500 பணம் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் மர்ம நபரை கைது செய்வதற்காக ஆதரிப்பேட்டை போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: ATM, Chennai, Theft