சென்னை சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனத்தின் 235 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு கமர்ஷியல் ஷோரூம் வாங்குவதற்காக இந்தியன் வங்கியில், சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவன உரிமையாளர்கள் 150 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளனர். அதே ஆண்டில் மேலும் 90கோடி ரூபாய் கடன் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கடன் தொடர்பான சொத்துக்களை வங்கிக்கு தெரியாமல் மாற்றியதாகவும், இரண்டாவதாக பெறப்பட்ட 90கோடி ரூபாய் கடன் மூலம் ஷோரும் வாங்குவதற்காக பெற்ற கடனை அடைக்க முயற்சி செய்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இந்தியன் வங்கியின் தலைமை நிர்வாகி சிபிஐயில் புகார் அளித்தார்.
குறிப்பாக வங்கியில் கடன் பெறுவதற்காக கூறப்பட்ட காரணங்களுக்காக பணத்தை பயன்படுத்தாமல், முறைகேடாக முதலீடு செய்ததுடன் பல்வேறு விதிமுறைகளை மீறியதும் தெரியவந்துள்ளதாக புகாரில் கூறப்பட்டிருந்தது. இந்த வங்கி மோசடி விவகாரத்தில் சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவன உரிமையாளர்கள் மற்றும் வங்கி அதிகாரிகள் மீது கடந்த மே மாதம் சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
முன்னதாக கடன் தொகை மற்றும் வட்டி 400 கோடி ரூபாயை தாண்டியதால் கடந்த ஜனவரி மாதம் தியாகராய நகரில் உள்ள சரவணா ஸ்டோர் கோல்டு பேலஸை இந்தியன் வங்கி ஜப்தி செய்தது. இந்நிலையில் தற்போது அந்நிறுவனத்திற்கு சொந்தமான 235 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: நள்ளிரவு முதலே களைகட்டிய காசிமேடு மீன் மார்க்கெட்
இதேபோல லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான 173 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்படுவதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையின்போது கணக்கில் வராத ரொக்கம் ,நகை மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதனை ஆய்வு செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள் மார்ட்டின் மற்றும் அவர் தொடர்புடைய நபர்கள் சட்ட விரோத பணப்பரிமாற்றம் செய்ததாக வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் படிக்க: சதுரங்கவேட்டை’ பட பாணியில் ஆசையை தூண்டி 5 லட்சத்தை அபேஸ் செய்த வடமாநில இளைஞர்!
இதையடுத்து 2019 ஆம் ஆண்டு ஜூலையில் 258 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை அதிகாரிகள் முடக்கினர். மேலும் 19கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முடக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது 173 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது
உங்கள் நகரத்திலிருந்து(சென்னை)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.