ஹோம் /நியூஸ் /சென்னை /

சூரியனுக்கு லீவு.. சட்டென மாறிய சென்னை வெதர்.. வெளுக்கத் தொடங்கிய மழை!

சூரியனுக்கு லீவு.. சட்டென மாறிய சென்னை வெதர்.. வெளுக்கத் தொடங்கிய மழை!

கனமழை

கனமழை

சென்னையில் காலை முதலே வானம் மேகமூட்டமாக காணப்பட்ட நிலையில், த்ற்போது சென்னையில் மழை பெய்து வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

சென்னையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று வெயில் அடித்த நிலையில் இன்று சூரிய வெளிச்சமே இல்லாமல் சென்னை மேகமூட்டத்துடனே இருந்தது. நள்ளிரவு முதல் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம் உட்பட புறநகர் பகுதியில் மழை பெய்து வருகிறது.

இன்னும் 5 நாட்களுக்கு சென்னையில் மழை பெய்யும் என வானிலை மையம் கணித்த நிலையில், சென்னையில் தற்போது கனமழை பெய்து வருகிறது.

வங்கக்கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. வரும் 13 மற்றும் 16 தேதிகளில் வங்கக் கடலில் மீண்டும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இது புயல் சின்னமாக மாறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும், ஆனால் வலுவிழக்கத்தான் அதிகம் வாய்ப்பு எனக் குறிப்பிட்டுள்ளனர்.

First published:

Tags: Chennai, Chennai rains, Weather News in Tamil