Home /News /chennai /

லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் மோடி, அமித் ஷா போட்டியிட வேண்டும் - அர்ஜூன் சம்பத்

லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் மோடி, அமித் ஷா போட்டியிட வேண்டும் - அர்ஜூன் சம்பத்

அர்ஜூன் சம்பத்

அர்ஜூன் சம்பத்

2024 லோக்சபா தேர்தலில், பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், தமிழகத்தில் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai | Tamil Nadu
    வரும், 2024 லோக்சபா தேர்தலின் போது, தமிழகத்தில் பிரதமர் மோடி போட்டியிட வேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேசினார்.

    அர்ஜுன் சம்பத் எழுதிய, எவரும் எட்ட முடியாத எட்டாண்டு சாதனை எனும், பிரதமர் மோடியின் சாதனை விளக்க நுால் வெளியீட்டு விழா சென்னை மைலாப்பூரில் நடைபெற்றது. பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா  நூலை வெளியிட, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பெற்றுக் கொண்டார். தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளான தீரன் சின்னமலை, பாரதியார், வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, ஜெய்ஹிந்த் செண்பகராமன், பாஷ்யம் அய்யர், நீலகண்ட பிரமச்சாரி, கடலுார் அஞ்சலையம்மாள் உள்ளிட்டோரின் வாரிசுகள் கவுரவிக்கப்பட்டனர்.



    இந்த நிகழ்ச்சியில் பேசிய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், தற்போதுள்ள திராவிட மாடல் ஆட்சியில், வரலாறு இருட்டடிப்பு செய்யப்படுகிறது. தமிழகத்தில், முதல் தேசியக் கொடி ஏற்றிய ஓமந்துாரார் தோட்டத்தில், அவரின் சிலையோ, புகைப்படமோ இல்லை. கருணாநிதி சிலை திறக்கப்படுகிறது.

    ALSO READ | திமுக என்றாலே கமிஷன், கலக்சன், கரப்ஷன் தான்..எடப்பாடி பழனிசாமி பேச்சு!

    திருப்பூர் குமரன் நினைவிடம் அருகில், சிலை வைத்தனர். இப்படி வரலாற்றுத் தலைவர்கள் உள்ள இடங்களில் எல்லாம், ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதி சிலைகளை பெரிது பெரிதாக வைத்து, பொம்மை நாடாக்க பார்க்கின்றனர். காங்கிரசை சேர்ந்த ராகுல், தியாகிகளின் நினைவிடத்துக்குச் செல்லவில்லை; வாரிசுகளைச் சந்திக்கவில்லை. ஆனால், மிஷனரிகள் நடத்தும் இடங்களுக்கு மறக்காமல் சென்று வருகிறார். இதிலிருந்து அவரின் நோக்கம் புரிகிறது.தமிழகத்தில் இருந்து வீணாக, 39 பேர் எம்.பி.,யாகி உள்ளனர். அவர்கள், மத்திய அரசின் திட்டங்களை தொடர்ந்து எதிர்க்கின்றனர்.

    ஹெச்.ராஜா - அண்ணாமலை - அர்ஜூன் சம்பத்


    இந்த நிலை மாற, 2024 லோக்சபா தேர்தலில், பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், தமிழகத்தில் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம். அப்போது தான், 40 தொகுதிகளும் பாஜக வசம் வரும்; தமிழகம் வளரும் என தெரிவித்துள்ளார்.
    Published by:Anupriyam K
    First published:

    Tags: Amith shah, Arjun Sampath, BJP, Chennai, Modi

    அடுத்த செய்தி