ஹோம் /நியூஸ் /சென்னை /

ரூ.8.5 கோடி மதிப்புள்ள 1074 உயர் ரக ஐபோன்களை விற்று நூதன மோசடி... நிறுவன ஊழியர் போட்ட மாஸ்டர் பிளான்

ரூ.8.5 கோடி மதிப்புள்ள 1074 உயர் ரக ஐபோன்களை விற்று நூதன மோசடி... நிறுவன ஊழியர் போட்ட மாஸ்டர் பிளான்

ஐபோன்களை கள்ள சந்தையில் விற்று பணம் பார்த்த 3 பேர்

ஐபோன்களை கள்ள சந்தையில் விற்று பணம் பார்த்த 3 பேர்

ரூ. 8.30 கோடி மதிப்பு கொண்ட 1074 உயர் ரக ஐபோன்கள் மற்றும் மூன்று ஆப்பிள் லேப்டாப்புகளை கள்ள சந்தையில் விற்று மோசடி செய்ததால் தனியார் நிறுவனம் அதிர்ச்சி

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Chennai, India

சென்னையில் விலை உயர்ந்த ஆப்பிள்  பொருட்களை நிறுவனத்திற்கு தெரியமால் கள்ள சந்தையில் விற்பனை செய்த 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம், சிவகங்கா பிரதான சாலையில் Frontier Business Pvt.Ltd. என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனமானது விலை உயர்ந்த செல்போன்கள், லேப்டாப்கள் போன்றவற்றை வெளிநாடுகளில் உள்ள செல்போன் நிறுவனங்களிடம் இருந்து மொத்தமாக வாங்கி அதனை இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள செல்போன் ஷோரூம்களில் மொத்த வியாபாரம் செய்து வருகின்றனர்.

இந்த நிறுவனத்தில் கடந்த நான்கு மாதங்களாக பல செல்போன் ஷோரூம்களில் விற்பனை செய்யப்பட்ட கோடி கணக்கான ரூபாய் மதிப்புள்ள செல்போன்களுக்கு பணம் வராமல் இருந்ததால் நிறுவன அதிகாரிகள் சந்தேகம் அடைந்துள்ளனர். இது குறித்து தங்களது வாடிக்கையாளர்களான செல்போன் ஷோரூம் உரிமையாளர்களுக்கு நேரடியாக சென்று கேட்டபோது கடந்த நான்கு மாதங்களாக தங்கள் நிறுவனத்தில் இருந்து செல்போன் மற்றும் லேப்டாப்புகள் வரவில்லை என கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த Frontier Business Pvt.Ltd. நிறுவனத்தின் மண்டல மேலாளர் தினேஷ், நிறுவனத்திற்குள் விசாரணை செய்தபோது நிறுவனத்திற்கே தெரியாமல் ரூ.8.30 கோடி அளவில் விலை உயர்ந்த நவீன மாடலில் 1074 ஐபோன்களை நிறுவன சேல்ஸ் டிபார்ட்மெண்ட் மோசடி செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து சேல்ஸ் டிபார்ட்மெண்ட் ஊழியர்களிடம் விசாரணை நடத்திய போது அன்றிலிருந்து சேல்ஸ் டிபார்ட்மென்ட் மேனேஜர் பிரதாப் பசுப்புலேட்டி என்பவர் நிறுவனத்திற்கு வரவில்லை. மேலும், அவரை செல்போன் மூலமாக தொடர்பு கொண்ட போது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து ஆதாரங்கள் அடிப்படையில் சேல்ஸ் டிபார்ட்மெண்ட் மேனேஜர் பிரதாப் பசுப்புலேட்டி தான் இந்த மிகப்பெரிய மோசடியை செய்துள்ளார் என்பது தெரிய வந்தது.

இதனால், நிறுவன மண்டல மேலாளர் தினேஷ் என்பவர் சென்னை காவல்துறை மத்திய குற்ற பிரிவில் கடந்த மாதம் இந்த மோசடி குறித்து புகார் அளித்திருந்தார்.

வழக்கு பதிவு செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு - ஆவண தடுப்பு பிரிவு போலீசார் பிரதாப் பசுப்புலேட்டியின் செல்போன் எண்ணை வைத்து இமாச்சலப் பிரதேசம், உத்தர்காண்ட் மற்றும் பஞ்சாப் சென்று தேடி உள்ளனர். தன்னை போலீசார் பின் தொடர்ந்து வருவதை அறிந்த பிரதாப் பசுப்புலேட்டி தனது சொந்த ஊரான ஆந்திர மாநிலம் நெல்லூரில் சென்று தலைமறைவானார்.

இதையும் படிங்க: ஒரே பயணச்சீட்டில் பேருந்து, மெட்ரோ ரயில், லோக்கல் ட்ரெய்ன்? முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை!

அவர் தனது சொந்த ஊரில் இருப்பதை அறிந்த போலீசார் அங்கு சென்று பிரதாப் பசுப்புலேட்டியை(32) கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் விசாரணையில் ரூபாய் 8.30 கோடி மதிப்புள்ள விலை உயர்ந்த நவீன ரக மாடலில் 1074 ஐபோன்கள் மற்றும் 3 ஆப்பிள் லேப்டாப்புகளை கள்ளசந்தையில் விற்றதை ஒப்புக்கொண்டார்.

போலீசார் தொடர் விசாரணையில் ஆந்திர மாநிலம் நெல்லூரை பூர்வீகமாக கொண்ட பிரதாப் பசுப்புலேட்டி கடந்த ஏழு ஆண்டுகளாக நுங்கம்பாக்கத்தில் உள்ள Frontier Business Pvt.Ltd. என்ற நிறுவனத்தில் சேல்ஸ்மேனாக பணியாற்றி வந்துள்ளார் என்பதும் இந்த நிலையில் சமீப காலமாக விற்பனைக்கு வரும் உயர் ரக ஐபோன்களில் ஒன்று, இரண்டு செல்போன்களை நிறுவனத்திற்கு தெரியாமல் கள்ளச் சந்தையில் விற்று லட்ச கணக்கில் லாபம் பார்த்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

ஒன்று, இரண்டு செல்போன்கள் என்பதால் நிறுவனத்திற்கு சந்தேகம் வராமல் இருந்துள்ளது. இதனால் லட்சங்களில் மோசடி செய்த பிரதாப் பசுப்புலேட்டி கோடிகளில் மோசடி செய்ய திட்டமிட்டுள்ளார்.

அதன்படி அந்த நிறுவன டெலிவரி டிபார்ட்மெண்ட் துணை மேலாளரான சேப்பாக்கத்தைச் சேர்ந்த குமரவேல்(44) மற்றும் செல்போன் விற்பனை இடைத்தரகரான ஆந்திரா மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த வெங்கடேஷ்வரலு(61) ஆகியோருடன் கூட்டு சேர்ந்து மோசடி சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார்.

பொதுவாக இந்த நிறுவனத்தில் இருந்து வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிற பகுதியில் உள்ள செல்போன் ஷோரூம்களுக்கு ஐபோன்கள் மற்றும் ஆப்பிள் லேப்டாப்புகள் அனுப்பிய பின் மூன்றில் இருந்து நான்கு மாதத்திற்குள் அதற்கு உண்டான பணத்தை வசூலித்துக் கொள்வார்கள். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பிரதாப் பசுப்புலேட்டி தமிழகத்தின் பல்வேறு ஷோரூம்கள் மற்றும் வெளிமாநிலத்தில் உள்ள பல்வேறு ஷோரூம்களின் பெயரில் போலியான பில்களை தயாரித்து அங்கு மொபைல் போன்கள் டெலிவரி டிபார்ட்மெண்ட் மூலமாக அனுப்பப்பட்டுள்ளதாகவும் பணம் இன்னும் 90 நாட்களில் வந்து விடும் என கணக்கு காட்டி வந்துள்ளார்.

அதன்படி ரூ.8.30 கோடி மதிப்புக்கொண்ட 1074 அதிக விலை கொண்ட உயர்ரக ஐபோன்கள் மற்றும் மூன்று ஆப்பிள் லேப்டாப்புகள் ஆகியவற்றை டெலிவரி டிபார்ட்மெண்ட் துணை மேலாளர் குமரவேல் மூலமாக செல்போன் இடைத்தரகர் வெங்கடேஸ்வரலுவிடம் கொடுத்துள்ளார்.

செல்போன் இடைத்தரகரான வெங்கடேஸ்வரலு, சென்னையில் பல்வேறு செல்போன் கடைகள் மற்றும் ரிச்சி தெருவில் உள்ள செல்போன் கடைகளில் ஒவ்வொரு செல்போனையும் அதன் விலையில் இருந்து 80% விலைக்கு விற்பனை செய்துள்ளார்.

இதையும் படிங்க: விடுவோமா.? ஒன்வே சாலையில் நுழைந்த போலீஸ் கார்.. போட்டோ போட்ட சிட்டிசன்.. அபராதம் விதித்த டிராபிக் போலீஸ்!!

இப்படி ரூபாய் 8.30 கோடி மதிப்பு கொண்ட உயர்ரக 1074 ஐபோன்களை ரூபாய் 6.40 கோடிக்கு விற்று வெங்கடேஸ்வரலு பணமாக மாற்றியுள்ளார். கிடைத்த பணத்தை 50%, 30%, 20% என்ற சதவிகித அளவுகளில் தங்களுக்குள் பங்கிட்டு கொண்டுள்ளனர்.

மேலும், இவர்கள் மூவரும் சேர்ந்து அடுத்த மோசடி சம்பவத்திற்கு திட்டமிட்ட நிலையில் தான் மண்டல மேலாளர் தினேஷ் கணக்கு வழக்குகளை ஆராய்ந்ததும், அப்போது ரூபாய் 8.30 கோடி மதிப்பு கொண்ட 1074 உயர் ரக ஐபோன்கள் மற்றும் மூன்று ஆப்பிள் லேப்டாப்புகள் மோசடி செய்யப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மூவரையும் மத்திய குற்றப்பிரிவு - ஆவண தடுப்பு போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும் கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்பட்ட செல்போன்களை பறிமுதல் செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Published by:Arunkumar A
First published:

Tags: Apple iphone, Chennai, Crime News