ஹோம் /நியூஸ் /சென்னை /

டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் மரண தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளிவைப்பு

டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் மரண தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளிவைப்பு

 சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம்

டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் விதிக்கப்பட்ட மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனையை எதிர்த்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான  விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம், நவம்பர் 11ம் தேதிக்கு  தள்ளிவைத்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நிலப் பிரச்னை தொடர்பாக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா, கடந்த 2013 ஆண்டு செப்டம்பர் மாதம் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கில், அரசு  ஆசிரியர் பொன்னுசாமி, அவரின் மகன்களான வழக்கறிஞர் பாசில், என்ஜினீயரான போரிஸ் மற்றும் வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், என்ஜினீயர் முருகன், செல்வபிரகாஷ் ஆகிய ஏழு பேருக்கு மரண தண்டனையும், பொன்னுசாமியின் மனைவி மேரி புஷ்பம் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து, கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பொன்னுசாமி, பாசில், போரிஸ், வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார் உள்ளிட்ட ஏழு பேருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்ய கோரி விசாரணை நீதிமன்றம்,   வழக்கு தொடர்பான விபரங்களை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தது.

இதேபோல, ஏழு பேரும் மரண தண்டனையை எதிர்த்தும் மேல் முறையீடு செய்திருந்தனர். ஆயுள் தண்டனையை எதிர்த்து மேரி புஷ்பம் மற்றும் ஏசுராஜன் ஆகியோரும் மேல் முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்குகள் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமர்வு முன் இன்று இறுதி விசாரணைக்கு வந்தன.

Also see...கிருஷ்ணகிரி இளைஞரை கரம் பிடித்த தைவான் நாட்டுப் பெண்..

அப்போது, வழக்கில் தண்டிக்கப்பட்டவர் தரப்பில்,  இறுதி விசாரணைக்கு தேதி நிர்ணயித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளதால் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் எனக் கோரப்பட்டது. ஆனால், நீண்ட நாளைக்கு தள்ளிவைக்க கூடாது என காவல் துறை தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதை ஏற்று, விசாரணையை நவம்பர் 11ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Chennai High court