ஹோம் /நியூஸ் /சென்னை /

பழங்கால பொருட்களை குறிவைத்து திருடும் திருடன் கைது: 100 ஆண்டுகள் பழமையான நாற்காலி உள்ளிட்டவை மீட்பு

பழங்கால பொருட்களை குறிவைத்து திருடும் திருடன் கைது: 100 ஆண்டுகள் பழமையான நாற்காலி உள்ளிட்டவை மீட்பு

பழமையான பொருட்களை திருடும் முத்து கைது

பழமையான பொருட்களை திருடும் முத்து கைது

100 ஆண்டுகள் பழமையான நாற்காலி, 60 ஆண்டுகள் பழமையான குபேரன் சிலை பறிமுதல்...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சாந்தோம் தேவாலயத்தில் இருந்து 100 ஆண்டுகள் பழமையான நாற்காலி ஒன்று காணாமல் போனதாக தேவாலய நிர்வாகத்தினர் மைலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இதே போல மயிலாப்பூர் சிவசாமி சாலையில் உள்ள வீடு ஒன்றில் 60 ஆண்டு கால பழமையான குபேரன் சிலை திருடப்பட்டுள்ளதாக  காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகார்களின் அடிப்படையில் மயிலாப்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர். அதில் பதிவான அடையாளங்களை வைத்து போலீசார் பழைய குற்றவாளிகளின் புகைப்படங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது ராயப்பேட்டை கபாலி நகர் பகுதியை சேர்ந்த முத்து(40) என்பதை கண்டறிந்தனர்.

பின்னர், தனிப்படை அமைத்து தலைமறைவாக இருந்த முத்துவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முத்து கார்பெண்டராக பணியாற்றி வருவதும், இவர் பழங்கால பொருட்கள் இருக்கும் வீடுகள் மற்றும் கடைகளை நோட்டமிட்டு அங்கு சென்று பழங்கால பொருட்கள் வாங்கி கொள்வதாக கூறி வந்து பின் திட்டமிட்டு பழங்கால பொருட்களை திருடி வந்ததும் தெரியவந்தது.

குறிப்பாக பொருட்களின் தொன்மை குறித்து அறிந்து கொண்ட முத்து, சில தினங்கள் நோட்டமிட்டு வீடுகள் மற்றும் கடைகளுக்குள் புகுந்து பழங்கால பொருட்களை திருடி வந்துள்ளார். திருடிய பொருட்களை பர்மா பஜார், புதுப்பேட்டை, மூர் மார்க்கெட் ஆகிய பகுதிகளில் உள்ள பழங்கால பொருட்கள் விற்கும் கடைகளில் 30,000 ரூபாய் முதல் முத்து விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும், கொள்ளையடித்த பணத்தில் முத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. ஏற்கனவே பழங்கால பொருட்களை திருடியதாக முத்து மீது தேனாம்பேட்டை, ராயப்பேட்டை ஆகிய காவல் நிலையங்களில் வழக்குகள் இருப்பதும், இரண்டு முறை முத்து கைதாகி  இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

Also see... காஞ்சிபுரத்தில் கேன், பாட்டில்களில் பெட்ரோல் வழங்க கூடாது... போலீஸ் உத்தரவு

கைது செய்யப்பட்ட முத்துவிடம் இருந்து 100 ஆண்டுகள் பழமையான நாற்காலி மற்றும் 60 ஆண்டுகள் பழமையான குபேரன் சிலை ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: CCTV Footage, Chennai, Mylapore