ஹோம் /நியூஸ் /சென்னை /

வீடு வழியாகவே விமான ஓடுபாதை.. பரந்தூரில் என்ன ப்ளான்.? அமைச்சர்களுடன் இன்று பேச்சுவார்த்தை!

வீடு வழியாகவே விமான ஓடுபாதை.. பரந்தூரில் என்ன ப்ளான்.? அமைச்சர்களுடன் இன்று பேச்சுவார்த்தை!

பரந்தூர் போராட்டம்

பரந்தூர் போராட்டம்

நிலம் கையகப்படுத்த எதிர்ப்புத் தெரிவித்து பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவினருடன், அமைச்சர்கள் சென்னையில் இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளை உள்ளடக்கி, சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்புத் தெரிவித்து பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பதற்காக, ஏகனாபுரத்தில் இருந்து போராட்டக்காரர்கள் வாயில் கருப்புத் துணி கட்டியும், கருப்புக் கொடி ஏந்தியும் நேற்று பேரணியாக சென்றனர்.

அப்போது, அவர்களிடம் துணை ஆட்சியர் மற்றும் எஸ்.பி., உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், முதலமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரினர். ஆனால், அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், தங்கம் தென்னரசு ஆகியோரைக் கொண்ட குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து, பேரணியை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில், பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினருடன், தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் இன்று நடத்துகின்றனர்.

இதனிடையே, நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு தொலைபேசி மூலம் விளக்கம் அளித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், கம்பன் கால்வாய் குறித்த போராட்டக்காரர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இருப்பினும், வீடுகள் வழியாகவே விமான நிலைய ஓடுபாதை அமைக்கப்படுவதால், அதைத் தவிர்க்க முடியாது என்று கூறினார். இதுகுறித்து, இன்றைய பேச்சுவார்த்தையின் போது, போராட்டக்காரர்களிடம் விளக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

First published:

Tags: Airport, Chennai, CM MK Stalin, Minister