அண்ணாசாலை நந்தனம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு கடந்த ஏப்ரல் 28-ம் தேதி முதல் டொயோட்டா ஷோரூம் அருகில் போக்குவரத்து மாற்றம் பரிசோதனை செய்யப்பட்டநிலையில் வாகனங்கள் சீராக சென்றதால் அதை நிரந்தரமாக செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
அண்ணாசாலையில் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றம்
வெங்கட நாராயண சாலையில் இருந்து சேமியர்ஸ் சாலைக்கு செல்லவிருக்கும் வாகனங்கள் நந்தனம் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி சுமார் 200 மீட்டர் தூரம் சென்று டொயோட்டா ஷோரூம் அருகில் 'U' திருப்பம் செய்து தாங்கள் செல்லவிருக்கும் இடத்திற்கு செல்லலாம்.
செனடாப் சாலையிலிருந்து தேனாம்பேட்டை நோக்கி செல்லும் வாகனங்கள் அண்ணாசாலை செனடாப் சாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி சுமார் 250 மீட்டர் தூரம் சென்று டொயோட்டா ஷோரூம் அருகில் 'U' திருப்பம் செய்து தாங்கள் செல்லவிருக்கும் இடத்திற்கு செல்லலாம்.
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு... இன்றைய பாதிப்பு நிலவரம்
பாரதிதாசன் சாலையிலருந்து அண்ணாசாலை X தேனாம்பேட்டை நோக்கி செல்லும் வாகனங்கள் பாரதிதாசன் சாலையில் இடதுபுறம் திரும்பி சுமார் டொயோட்டா ஷோரூம் அருகில் 'U' திருப்பம் செய்து தாங்கள் செல்லவிருக்கும் இடத்திற்கு செல்லலாம் என்று போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.