ஹோம் /நியூஸ் /சென்னை /

'யாரையும் விடமாட்டேன்.. பாஜகவில் அதிரடி நடவடிக்கை தொடரும்' - அண்ணாமலை எச்சரிக்கை

'யாரையும் விடமாட்டேன்.. பாஜகவில் அதிரடி நடவடிக்கை தொடரும்' - அண்ணாமலை எச்சரிக்கை

மாதிரி படம்

மாதிரி படம்

நாளை திருப்பூரில் இது தொடர்பாக விசாரணை கமிட்டி கலந்து ஆலோசிக்க உள்ளனர். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நான் விட போவதில்லை என்று அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  திருச்சி சூர்யா ஆடியோ விவகாரம் குறித்து ஒரு வாரத்தில் அறிக்கை கேட்டிருந்த நிலையில் தற்போது இரண்டே நாளில் அறிக்கை வேண்டுமென கேட்டுள்ளோம் . நிச்சயமாக தவறு இருக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

  பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது  பேசியவர், “ திருச்சி சூர்யா ஆடியோ விவகாரம் குறித்து ஒரு வாரத்தில் அறிக்கை கேட்டிருந்த நிலையில் தற்போது இரண்டே நாளில் அறிக்கை வேண்டுமென கேட்டுள்ளோம். நிச்சயமாக தவறு இருக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

  மேலும் பேசிய அவர், ''நாளை திருப்பூரில் இது தொடர்பாக விசாரணை கமிட்டி கலந்து ஆலோசிக்க உள்ளனர். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நான் விட போவதில்லை. இன்னும் பத்து நாட்களில் பாஜகவில் இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகள் தொடரும். கட்சியினுடைய லட்சுமண ரேகையை யாரு தாண்டுகிறார்களோ அவர்கள் யாரையும் விட மாட்டோம். காயத்ரி சபரீசனை பார்த்ததாக நான் எங்கும் கூறவில்லை நான் கூறியதற்கு மட்டும் நான் பதில் அளிக்கிறேன்” என்றார்.

  அதனைத் தொடர்ந்து பேசியவர், “ இந்த கட்சி இவர்களுக்கான கட்சி இந்த கட்சியில் நாங்கள் தான். இந்த கட்சியில் யாரும் வர முடியாது என்று சொல்வதற்கெல்லாம் இந்த கட்சி கிடையாது. இந்த கட்சி எல்லோருக்குமான கட்சி. இந்த கட்சியை இரும்பு பிடியில் வைத்திருப்பேன் என யார் கூறினாலும் அதை நான் விடமாட்டேன். ஆளுநர் சார்பாக நான் பேச முடியாது. இன்று ஆளுநரை எடப்பாடி பழனிச்சாமி ஏன் சந்திக்கிறார் என்பது குறித்து எனக்கு தெரியாது. 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் எப்படி இருக்கும் என எனக்கு தெரியாது” என்று கூறினார்.

  Also see... ரேஷன் அட்டைதாரர்களுக்கு நாளைமுதல் ரூ.1,000 - ஆட்சியர் உத்தரவு

  மேலும் தேர்தல் குறித்த கருத்துக்கு பதிலளித்தவர், என்னுடைய கருத்து பாரதிய ஜனதா கட்சி இத்தனை இடத்தில் நிற்க வேண்டும் என விரும்புகிறேன். நாங்கள் கூட்டணியில் தொடர்கிறோம். ஆனால் அதே வேலையில் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அதே வேலையில் பாஜக வளர்ச்சி அடைந்திருக்கிறது. இன்னும் 16 மாதங்கள் இருக்கிறது. எனவே இன்றைக்கே கூட்டணி எப்படி அமையப் போகிறது என்பதை தெரிவிக்க முடியாது’’ என்றார்.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Annamalai, BJP, Chennai, Surya, Trichy