முகப்பு /செய்தி /சென்னை / பாஜக ஆட்சிக்கு வந்தால்தான் தமிழ்நாட்டில் ஜாதி அரசியல் ஒழியும்: அண்ணாமலை

பாஜக ஆட்சிக்கு வந்தால்தான் தமிழ்நாட்டில் ஜாதி அரசியல் ஒழியும்: அண்ணாமலை

அண்ணாமலை

அண்ணாமலை

தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால்தான் ஜாதி அரசியல் ஒழியும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

சென்னை கீழ்ப்பாக்கத்தில் பாஜக சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அண்ணாமலை, எமர்ஜென்சி காலத்திற்கு முன்புவரை நாட்டில் மதத்தை வைத்து யாரும் அரசியல் செய்யவில்லை என கூறினார். எமர்ஜென்சி காலத்திற்கு பிறகே மதச்சார்பின்மை என்ற பெயரில் இங்கு அரசியல் செய்யப்பட்டதாக கூறினார். மேலும், தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால்தான் ஜாதி அரசியல் ஒழியும் என்றார்.

தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொள்ளவுள்ளதாக கூறிய அண்ணாமலை, நடைபயணத்தின் முதல் நாளன்று தனது வங்கிக்கணக்கின் முழு விவரங்களையும் வெளியிடுவேன் என கூறினார். மேலும், ரஃபேல் கடிகாரத்தின் விலை என்ன என திமுகவினர் கேட்பதை வரவேற்பதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.

முன்னதாக, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கைக்கடிகாரத்தை கட்டுவதுதான் தேசபக்தியா என அண்ணாமலைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி டிவிட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார். தேர்தலுக்கு முன்பே விலையுயர்ந்த வாட்ச் வாங்கியிருந்தால், அதனை ஏன் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலில் குறிப்பிடவில்லை என்றும் செந்தில் பாலாஜி கேட்டுள்ளார்.

Also see... உதயநிதி அமைச்சராக பதவியேற்றது முதல் அர்ஜெண்டினா வெற்றி வரை.. கடந்த வார முக்கியச் செய்திகள்..

5 லட்சம் ரூபாய் கைக்கடிகாரத்தை 2021-ல் வாங்கியதாக கூறும் அண்ணாமலை, அதற்கான ரசீதை வைத்திருக்கிறாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

First published:

Tags: Annamalai, BJP, Chennai, Politics, Tamil Nadu