ஹோம் /நியூஸ் /சென்னை /

கான்வாய் வாகனத்தில் பயணித்த மேயர்... இதுதான் சுயமரியாதையா? - அண்ணாமலை விமர்சனம்..!

கான்வாய் வாகனத்தில் பயணித்த மேயர்... இதுதான் சுயமரியாதையா? - அண்ணாமலை விமர்சனம்..!

அண்ணாமலை, ப்ரியா ராஜன்

அண்ணாமலை, ப்ரியா ராஜன்

கான்வாய் வாகனத்தில் மேயர் பிரியா ராஜன், மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்டோர் தொங்கியபடி பயணம் செய்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

முதலமைச்சரின் கான்வாய் வாகனத்தில் தொங்கியபடி மேயர் பிரியா ராஜன் பயணம் செய்ததற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை காசிமேடு பகுதியில் மாண்டஸ் புயல் மற்றும் மழை பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்ட பின்னர், அங்கிருந்து புறப்பட்டபோது அவரது கான்வாய் வாகனத்தில் மேயர் பிரியா ராஜன், மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்டோர் தொங்கியபடி பயணம் செய்தனர்.

இந்த புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சுய மரியாதை, சமூகநீதி, மற்றும் சாமானியர்களின் கட்சி என்ற திமுகவின் போலி கதைகள் மீண்டும் வெளிப்பட்டுள்ளதாக விமர்சித்துள்ளார்.

First published:

Tags: Annamalai, Chennai Mayor, Mayor Priya, Priya Rajan