Home /News /chennai /

225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக் கழகம் நோட்டீஸ்

225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக் கழகம் நோட்டீஸ்

அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகம்

Anna University notice | தமிழகத்தில் 225 பொறியியல் கல்லூரிகளில் அடிப்படை வசதிகள், உரிய கட்டமைப்பு, உரிய பேராசிரியர்கள் இல்லாதது தொடர்பாக விளக்கமளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    தகுதியுள்ள பேராசிரியர்கள் இல்லாதது, உரிய கட்டமைப்பு வசதி,  உரிய ஆய்வக வசதி இல்லாதது உள்ளிட்ட காரணங்களை சுட்டி காட்டி இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இரண்டு வார காலத்தில் குறைபாடுகளை சரி செய்தால் மட்டுமே நடப்பாண்டில் அங்கீகாரம் வழங்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இரண்டாண்டுகள் கழித்து கடந்த மே மாதம் மற்றும் ஜூன் மாதத்தில் அண்ணா பல்கலைக் கழகம் சார்பில் அங்கீகாரத்திற்காக விண்ணப்பித்த 476 பொறியியல் கல்லூரிகளில் ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வின் போது 50 சதவீதத்திற்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கல்லூரிகளை நடத்துவதற்குரிய வசதிகள் இல்லாதது கண்டறியப்பட்டது.

    மேலும் பல கல்லூரிகள் கொரோனொ காலத்தில் பேராசிரியர்களை குறைத்ததோடு அவர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என்பதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

    Also see... பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகள் - பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவு

    இதனைத் தொடர்ந்து 225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில் குறைபாடுகளை இரண்டு வார காலத்தில் சரி செய்யவேண்டும் என்றும் அவ்வாறு செய்தால் மட்டுமே அங்கீகாரம் வழங்கப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Anna University, College, Engineering

    அடுத்த செய்தி