சென்னை அண்ணா நகரில் உள்ள பூங்காவில் 100 அடி உயரம் உள்ள டவர் ஒன்று அமைந்துள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக பொது மக்கள் உபயோகத்தில் இல்லாமல் இருந்த இந்த டவர், தற்போது சென்னை மாநகராட்சியால் மீண்டும் திறக்கப்படவுள்ளது. மக்கள் செயல்பாட்டிற்கு விரைவில் அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைக்கவுள்ளார்.
அண்ணா நகர் டவர் பூங்காவிற்குள் 1960-களில் 100 அடி உயரத்தில் 12 மாடிகளுடன் இந்த டவர் கட்டப்பட்டது. பிரபலமாக மக்கள் செயல்பாட்டிலிருந்த இந்த டவர் அதிகரிக்கும் தற்கொலைகள் காரணத்தினால் 2011 ஆம் ஆண்டு மூடப்பட்டது.
அதன் பின்னர், 12 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் டவரை மக்கள் பார்வை திறக்கவுள்ளனர். அதற்காக டவரில் சீரமைப்பு பணிகள் கடந்த ஆண்டே தொடங்கியது. பாதுகாப்பு காரணங்களினால் 12 மாடிகளிலும் கிரில் போட்டு அடைக்கப்பட்டுள்ளது. மேலும், டவரின் சுவர்களில் தமிழ் கலாச்சாரத்தை பிரதபளிக்கும் வகையில் வண்ண மையமான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது.
Also Read : போதை வாகன ஓட்டுநர்களிடம் ரூ.6 கோடி அபராதம் வசூல் - சென்னை போலீசார் அதிரடி
தரைகளில் டயில்ஸ் போட்டுப் பாதுகாப்பாக மக்கள் பார்வைக்குத் திறக்கப்படவுள்ளதாகச் சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.