ஹோம் /நியூஸ் /சென்னை /

பாழடைந்த வீட்டில் 20 வருடங்களாக வசிக்கும் ஆங்கிலோ-இந்தியன் சகோதரிகள்... சென்னையில் ஓர் மர்மம்?

பாழடைந்த வீட்டில் 20 வருடங்களாக வசிக்கும் ஆங்கிலோ-இந்தியன் சகோதரிகள்... சென்னையில் ஓர் மர்மம்?

ஆங்கிலோ இந்தியன் சகோதரிகள் வசிக்கும் பாழடைந்த வீடு

ஆங்கிலோ இந்தியன் சகோதரிகள் வசிக்கும் பாழடைந்த வீடு

Special Story : பெற்றோர்கள் மருத்துவமனையில் இறந்த சோகம் 20 ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே முடங்கிய 2 ஆங்கிலோ இந்தியன் சகோதரிகள்.  உண்மை நிலை என்ன? 

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • Chennai, India

  காடுபோல் புதர் மண்டியிருக்கும் வீட்டிற்குள் 20 வருடங்களாக வசிக்கும் சகோதரிகள் தங்களது இந்த நிலைமைக்கு அதிமுக பிரமுகர் ஒருவர்தான் காரணம் என பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இதுகுறித்து உண்மை நிலை என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

  சென்னை அடுத்த மாதவரத்தில் ஆள் உயர கள்ளிச்செடிகள், வீட்டை சுற்றிலும் புதர்கள் பொதுவாக வெளியில் இருந்து பார்க்கும்போது பாழடைந்த வீடு, யாரும் இதில் வசிப்பதில்லை என்பது போலத்தான் நினைக்கத் தோன்றும். ஆனால் ஆங்கிலோ-இந்தியன்ஸ்   சகோதரிகள்  திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் 20 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர்.

  இந்த வீட்டிற்குள் மனிதர்கள் யாருமே இல்லை என்பதை போலத்தான் நினைக்க தோன்றும். ஆனால் இந்த வீட்டிற்குள் தான் கிட்டத்தட்ட 20 வருடங்களாக அடைப்பட்டு கிடக்கின்றனர் இந்த ஆங்கிலோ இந்தியன் சகோதரிகள்.

  ஆங்கிலோ இந்தியன் சகோதரிகள் வசிக்கும் பாழடைந்த வீடு

  இதையும் படிங்க : குக்கர் வெடிகுண்டுடன் போட்டோ க்ளிக்.. தமிழகத்தில் 3 நகரங்கள்.. ஆட்டோ வெடி விபத்தில் அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள்!

  இந்த சகோதரிகள் இருவரும் சுற்றியுள்ள யாருக்கும் எந்த தொந்தரவும் தருவதில்லை. வீட்டை இவர்களுக்கு பராமரிக்க போதிய நிதி இல்லை. உதவுவதற்கு யாரும் இல்லாததால் தங்களது பெற்றோர் இறந்த நிலையில் அவர்கள் பெயரில் இருந்த வீட்டை வீட்டை சுற்றி தூதுவளை, துளசி போன்ற மூலிகை செடிகளை ஆர்வத்துடன் வளர்த்து வருகின்றனர்.

  சகோதரிகள் தங்கள் வீட்டின் பாதுகாப்பிற்கு என ஆள் உயர கள்ளிச் செடியை அரனாக வளர்த்து வைத்துள்ளனர். திருடர்கள் பயம், வெளி ஆட்கள் தொந்தரவு என எதுவும் இன்றி இரண்டு சகோதரிகளும் சுதந்திரப் பறவைகளை போல வாழ்ந்து வருகின்றனர்.

  சமூக வலைதளங்களில் தற்போது இவர்கள் பெயர், வீடு ஆகிய வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதுடன்  இவர்களது வீடு ஒரு அமானுஷ்ய வீடு என்று பரப்பப்படும் தவறான தகவல்களால் நிம்மதியை இழந்துள்ளனர்.

  இந்த சகோதரிகள் தவித்து வருவதுடன் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் வருவோர் போவோர்களுக்கு பதில் சொல்லி சளைத்து போய் உள்ளனர். இந்த இரண்டுஆங்கிலோ இந்தியன்ஸ் சகோதரிகள்  ஒருவரையும்  தொந்தரவு செய்வதில்லை.

  ஆங்கிலோ இந்தியன் சகோதரிகள் வசிக்கும் பாழடைந்த வீடு

  அன்றாடம் கடை தெருவுக்கு செல்வது, பேருந்தில் பயணிப்பது, தேவாலயத்திற்கு செல்வது என சராசரி மனிதர்கள் போன்றுதான் இவர்களின் வாழ்க்கையும் செல்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் பயிலும் பள்ளி மாணவர்களின் காட்சிப் பொருளாக இருந்த இந்த வீடு பலமுறை கல் வீச்சிற்கும்  ஆளாகியுள்ளது.

  இரண்டு சகோதரிகளும் இயற்கையான சூழலில் ஆரோக்கியமாக தான் வாழ்ந்து வருகின்றனர். இந்த வீட்டை பார்க்க வரும் சிறார்கள் ஆர்வம் மிகுதியில் இரண்டு சகோதரர்களையும் பார்க்க வேண்டும் என்று அவர்களிடம் வாக்குவாதம் செய்து வீட்டின் மீது கற்களை வீசி விட்டுச் சென்று விடுகின்றனர்.

  இப்படி பலமுறை கல்விச்சுக்கு ஆளான இந்த சகோதரிகளின் வீடு முழுக்க இருந்த கற்களை அவர்களே சேகரித்தும் வைத்துள்ளனர். தங்கள் வீட்டை காலி செய்ய வேண்டும் என்று பல ஆண்டுகளுக்கு முன் அதிமுக பிரமுகர் ஒருவர் மிரட்டியதாக கூறும் இந்த சகோதரிகள் தங்களுக்கு தமிழக முதலமைச்சர் உதவ வேண்டும் என்றும் வேண்டுகோள் வைக்கின்றனர்.

  பாழடைந்த இவர்களது வீட்டில் கழிவுநீர் வெளியேற வழி செய்து தரவேண்டும். முறையான குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும், கழிப்பிட அடைப்பை சரி செய்து தரவேண்டும் என்று இயற்கையான சூழலில் மூலிகைச் செடிகளை வைத்து பராமரித்து வரும் 2 சகோதரிகளுக்கு தமிழக அரசு உதவிட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  இதையும் படிங்க : சென்னை அருகே நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் - வானிலை ஆய்வு மையம்

  மாதவரம் ஆங்கிலோ-இந்தியன் தெருவில் வசிக்கும் இவர்கள் அந்த தெருவில் வசிக்கும் யாருடனும்  அதிக தொடர்பில் இல்லை. இந்த சகோதரிகள்  வெளியில் சென்றால் அனைவரிடமும்  சகஜமாக தான் பேசுவதாகவும், கடைவீதிக்கு செல்லும்போதும், பொதுவெளியிலும்  யாரையும் தொந்தரவு செய்யாமல் செல்வதாகவும் தெரிவிக்கிறார்கள் அப்பகுதி வாசிகள். அதோடு லிப்ஸ்டிக். தொப்பி என ஆங்கிலோ இந்தியன் ஸ்டைல் மாறாமல் சென்று  வருவதாகவும், சர்ச்சுக்கு செல்லும்போது இவர்கள் போகும் ஸ்டைலே தனி என்கின்றனர்  அப்பகுதிவாசிகள்.

  மேலும், வீட்டில் தனிமையில் இருந்த இவர்களை பார்க்கச் சென்ற மாணவர்கள் அவர்கள் கைகளில் ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பதையும் படம் பிடித்துள்ளனர். மாதவரத்தில் ஏற்கனவே தாங்கள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியில் பயின்றபோது இந்த இரண்டு சகோதரிகள் குறித்து தங்களுக்கு தெரியும் என்றும் அப்போது அடிக்கடி வந்து பார்த்து செல்வோம் என்றும் முன்னாள் மாணவர்கள் கூறுகின்றனர்.

  தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகியதால் மீண்டும் பார்க்க வந்ததாக கூறுவதுடன் இவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் அரசு இவர்களுக்கு உதவ வேண்டும் என்றும் வேண்டுகோள் வைக்கின்றனர்.

  20 ஆண்டுகளாக இருந்த இந்த சகோதரிகளை சமூக வலைதளம் சித்தரித்து தற்போது மீண்டும் சந்தி சிரிக்க வைத்துள்ளது என்பது தான் நிதர்சனம். காவல்துறையினர் உதவியுடன் மாநகராட்சி மண்டல அதிகாரிகள் இந்த சகோதரிகளுக்கு வீட்டில் உள்ள அடிப்படை வசதிகளை மேம்படுத்தி அவர்களின் விருப்பப்படி வாழ உதவிட வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கு உதவிட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

  யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் :

  இதுகுறித்து மூலக்கடை  மாணவர் விஜய் கூறுகையில், “இரண்டு சகோதரிகள் யாருக்கும் எந்த தொந்தரவும் செய்யாமல் நல்ல நிலையில் வாழ்பவர்கள். இவர்கள் குறித்து எங்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே தெரியும். அப்போதே வந்து நாங்கள் பார்த்தோம்.

  நன்றாக பேசக்கூடியவர்கள். இவர்களுக்கு தேவை அரசின் உதவி மட்டுமே. தற்போது சமூக வலைதளங்களில் தவறாக இவர்கள் குறித்து செய்திகள் பகிரப்பட்டு நிம்மதியை இழந்துள்ளனர். எனவே யாரும் தொந்தரவு செய்யவேண்டாம்” என்றார்.

  செய்தியாளர் : பார்த்தசாரதி

  Published by:Karthi K
  First published:

  Tags: Chennai