Home /News /chennai /

தாம்பரம் அருகே ரூ.1000 வாடகையில் சிறிய வீட்டில் செயல்படும் அங்கன்வாடி... நிற்க கூட இடம் இல்லாமல் குழந்தைகள் தவிப்பு

தாம்பரம் அருகே ரூ.1000 வாடகையில் சிறிய வீட்டில் செயல்படும் அங்கன்வாடி... நிற்க கூட இடம் இல்லாமல் குழந்தைகள் தவிப்பு

தாம்பரம் - அங்கன்வாடி

தாம்பரம் - அங்கன்வாடி

Tambaram | தாம்பரம் அருகே நிற்பதற்கு கூட இடமில்லாமல் அங்கன்வாடி செயல்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    சென்னை தாம்பரம் அடுத்த புது பெருங்களத்தூர் சதானந்தபுரம் பகுதியில் அங்கன்வாடி ஒன்று இயங்கி வருகிறது.
    சதானந்தபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள இரண்டு வயதிற்கு மேற்பட்ட 30 குழந்தைகள் பயின்று வந்தனர்.
    இந்நிலையில்  பெருங்களத்தூர் முதல் மப்பேடு வரையிலான ஆறு வழிச்சாலை  விரிவாக்க பணிக்காக அங்கன்வாடி இயங்கி வந்த கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது.

    அங்கன்வாடி நடத்த கட்டிடம் இல்லாத காரணத்தினால் ஒரு சில மாதங்களாக அங்கன்வாடி நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பாக அங்கன்வாடிக்கு அரசு கட்டிடங்கள் இல்லாத நிலையில்  ஒரு அங்கன்வாடிக்கு 1000 ரூபாய் வீதம் வாடகை கொடுக்கப்பட்டு வருகிறது.

    அதன் அடிப்படையில் சதானந்தபுரம் பகுதியில் 1000 ரூபாய் வாடகைக்கு கிடைக்கும் கட்டிடத்தில் அங்கன்வாடியை நடத்துமாறு பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாகவும் அதன் அடிப்படையில் சதானந்தபுரம் பகுதியில் ஒரு  சிறிய அளவிலான வீடு எடுத்து இந்த அங்கன்வாடியை நடத்த வேண்டிய கட்டாய சூழ்நிலையில் தள்ளப்பட்டனர் .

    அதுமட்டுமின்றி குழந்தைகளுக்கு பள்ளி கல்வித்துறை சார்பாக வழங்கப்படும் காலை சிற்றுண்டி மதிய உணவு மற்றும் ஊட்டச்சத்து மாவு போன்ற உணவு வகைகளை சமைப்பதற்கும் அதே அறையினை பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எரிவாயு சிலிண்டர் சமையல் பொருட்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் 8 அடி6 அங்குலம் என்ற அளவு கொண்ட ஒரு சிறிய அறையில் வகுப்பினை நடத்த வேண்டிய அவல நிலை ஏற்பட்டு வருகின்றது.

    அது மட்டுமின்றி அங்கன்வாடிக்கு செல்லும் பாதையானது  முற்றிலும் செடி கொடிகள் படர்ந்தும் குழந்தைகள் விளையாடவோ நடக்கவோ  போதிய இடம் இன்றி இருக்கும் அவல நிலையில் அங்கன்வாடி ஒரு ஆண்டுக்கு மேலாக இயங்கி வருகிறது.

    Also see...அதிகாரிகள் ஊதியத்திற்காக வேலை செய்யாமல் மாற்றத்திற்காக பணியாற்றுங்கள் - அமைச்சர் அன்பில் மகேஷ்

     

    பெரும் அசம்பாவிதமோ விபத்துகளோ  ஏற்படுவதற்கு முன்னர் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் மற்றும் பள்ளி கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுத்து 30க்கும் மேற்பட்ட குழந்தைகளின் ஆரம்ப கால பள்ளியினை உரிய பாதுகாப்புடனும், தேவைகளை நிறைவேற்றும் வகையிலும் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Anganvadi, Chennai, Tambaram

    அடுத்த செய்தி