முகப்பு /செய்தி /சென்னை / நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு மீது செப்டம்பர் 13ம் தேதி உத்தரவு

நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு மீது செப்டம்பர் 13ம் தேதி உத்தரவு

முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார்

முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார்

former minister Jayakumar| நில மோசடி புகாரில் தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கில் செப்டம்பர் 13ஆம் தேதி உத்தரவு பிறப்பிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

சென்னை துரைப்பாக்கத்தில் மீன் வலை உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ள 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ் என்பவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது.

இதில் தனது செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம்  மிரட்டி நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாக ஜெயகுமாருக்கு எதிராக மகேஷ் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில்  ஜெயக்குமார், மகள் ஜெயபிரியா மற்றும் அவரது மருமகன் நவீன்குமார் ஆகியோர் மீது கொலை மிரட்டல், சதித்திட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தனது மருமகனுக்கும் அவரது சகோதரருக்கும் இடையேயான சொத்து பிரச்சனையில் தன் மீது  மகேஷ் அளித்த பொய் புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக ஜெயக்குமார் தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும் கடந்த 2016 ஆம் ஆண்டு  நடந்ததாக கூறப்படும் சம்பவத்திற்கு 2021ஆம் ஆண்டு தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

புகார்தாரரான மகேஷ்குமார் தரப்பில், கடந்த 2016ஆம் ஆண்டு ஜெயக்குமார் அமைச்சராக இருந்ததால் புகார் அளிக்க இயலவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டது.

Also see...எடப்பாடி பழனிசாமி கருத்துக்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி

இதையடுத்து இந்த வழக்கில்  செப்டம்பர் 13ஆம் தேதி உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதி தெரிவித்து வழக்கை தள்ளி வைத்தார்.

First published:

Tags: ADMK, Chennai High court, Jayakumar