ஹோம் /நியூஸ் /சென்னை /

திடீரென கத்தியை எடுத்த கும்பல்.. மருத்துவமனை வளாகத்தில் நடந்த கொலைமுயற்சி.. பகீர் சம்பவம்!

திடீரென கத்தியை எடுத்த கும்பல்.. மருத்துவமனை வளாகத்தில் நடந்த கொலைமுயற்சி.. பகீர் சம்பவம்!

சிசிடிவி காட்சி

சிசிடிவி காட்சி

சூர்யாவைப் பற்றி ரகசிய தகவல்களை முருகன் காவல்துறையினருக்கு கொடுத்துள்ளார் என்றும், சூர்யாவின் எதிரியான லெனினிடம் முருகன் நெருக்கமாக பழகி சூர்யா பற்றி ரகசிய தகவல் கூறியதும் தெரிய வந்தது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tambaram, India

  சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் அகரம் தென் ஊராட்சி பதுவஞ்சேரியை சேர்ந்தவர் முருகன் (வயது 37) இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரை கொலை செய்ய கடந்த 28ஆம் தேதி மர்ம நபர்கள் மூன்று பேர் பட்டாகத்தியுடன் வெட்டினர்.இதன் சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  கடந்த அக்டோபர் 28 ஆம் தேதி, சேலையூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துமனையில் விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் தனது உறவினரான பிரதீப் குமார் மற்றும் சுரேஷ் குமார் ஆகிய இருவரையும் பார்க்க சென்றார் முருகன். அப்போது பார்வையாளர்கள் அமரும் இருக்கையில் முருகன் அமர்ந்துகொண்டு இருந்துள்ளார் அப்போது மூன்று மர்ம நபர்கள் பின்பக்கமாக வந்து அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர்.

  இதையும் படிக்க : மனைவியுடன் கள்ளக்காதல்.. கேட்காத ஆட்டோ ஓட்டுநர் கழுத்துறுத்து கொலை - முன்னாள் எம்.எல்.ஏவின் தம்பி கைது

  இதையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்டு முதல் சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் சுய நினைவு இல்லாத நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

  இந்த சம்பவம் குறித்து சேலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை சேகரித்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

  இந்நிலையில், இந்த குற்றத்தை செய்தவர் டில்லி கணேஷ் என்பதும், இவர் மப்பேடு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. உடனே குற்றவாளியை பிடிக்க வீட்டிற்கு சென்ற போது, போலீசாரை கண்டு அங்கிருந்து தப்பிச் செல்வதற்காக வீட்டின் மொட்டை மாடியில் இருந்து குதித்தபோது வலது கை முறிவு ஏற்பட்டது. உடனே போலீசார் டில்லி கணேஷை மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

  சிகிச்சை முடிந்த பின்னர் டெல்லி கணேசனிடம் விசாரணை செய்ததில்  முருகன் மற்றும் நெடுங்குன்றம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சூர்யா இருவரும் நண்பர்களாக இருந்த வந்த நிலையில் 2009 ஆம் ஆண்டு  கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

  இதையும் படிக்க : மனைவியின் கள்ளக்காதலனை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய கணவன்.. 

  இந்த நிலையில் சூர்யாவைப் பற்றி ரகசிய தகவல்களை முருகன் காவல்துறையினருக்கு கொடுத்துள்ளார் என்றும், சூர்யாவின் எதிரியான லெனினிடம் முருகன் நெருக்கமாக பழகி சூர்யா பற்றி ரகசிய தகவல் கூறியதும் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து சூர்யாவின் நண்பர்களுக்கும் முருகனுக்கும் ரியல் எஸ்டேட் தொழிலில் போட்டி ஏற்பட்டது.

  தொழில் போட்டியின் காரணமாக முருகனை கொலை செய்ய திட்டமிட்டு மருத்துவமனையில் வெட்டியதாக குற்றவாளி பகிர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதன் பிறகு குற்றவாளி டில்லி கணேஷ் மீது வழக்கு பதிவு செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தப்பியோடிய இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

  தாம்பரம் மற்றும் சேலையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் பட்டா கத்தியால் வெட்டி விட்டு தப்பி செல்லும் குற்றச்செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.காவல்துறையினர் இதனை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

  Published by:Raj Kumar
  First published:

  Tags: Attempt murder case, Chennai, Crime News, Tambaram