ஹோம் /நியூஸ் /சென்னை /

திமுகவின் கட்சி விதிகளில் திருத்தம்! பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் இதுதான்!

திமுகவின் கட்சி விதிகளில் திருத்தம்! பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் இதுதான்!

திமுக கட்சி விதிகள் மாற்றம்

திமுக கட்சி விதிகள் மாற்றம்

பொதுசெயளாலராக ஐ.பெரியசாமி, ஆ.ராசா, பொன்முடி, அந்தியூர் செல்வராஜ், ஆகியோர் நியமிக்கப்பட்டனர். புதிய பொதுசெயலாளராக கனிமொழி எம்.பி நியமிக்கப்பட்டார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  திமுகவின் 15ஆவது பொதுக்குழு இன்று நடைபெற்று வரும் நிலையில் கட்சியின் விதிகள் திருத்தப்பட்டிருக்கிறது.

  நியமனங்கள்..

  இன்று நடைபெற்ற பொதுக்குழுவில், திமுகவின் தலைவராக மு.க.ஸ்டாலினும், திமுகவின் பொதுசெயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வாகினர்.

  மேலும், திமுகவின் முதன்மை செயலாளராக கே.என்.நேருவும், துணை பொதுச்செயலாளராக ஐ.பெரியசாமி, ஆ.ராசா, பொன்முடி, அந்தியூர் செல்வராஜ், ஆகியோர் நியமிக்கப்பட்டனர். புதிய பொதுசெயலாளராக கனிமொழி எம்.பி நியமிக்கப்பட்டார்.

  இதையும் படிக்க : திமுகவின் துணை பொதுச்செயலாளராக கனிமொழி தேர்வு!

   கட்சி விதிகள்

  அந்த பொதுக்குழுவில், திமுகவின் கட்சி விதிகள் திருத்தப்பட்டது.

  விதி 31 - சுற்றுச்சூழல் அணி புதிதாக ஏற்படுத்துதல்

  விதி 6(2) - திமுக அயலக அணி புதிதாக ஏற்படுத்தியதற்கு பொதுக்குழு ஒப்புதல்

  பிரிவு 5 - தொழிலாளர் அணி, - தலைமைக் கழக ஒப்புதல் பெற்ற பிறகே தொழிலாளர் ஆணையரிடம் சமர்ப்பிக்க வேண்டும்

  விதி 11( 3) - மாவட்ட கழக உறுப்பினர்கள் ஒன்று கூடி மாவட்ட அவைத்தலைவர், செயலாளர், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பொதுக்குழு உறுப்பினரில் ஒருவர் மகளிர் இருக்க ஒப்புதல்.

  திமுக தலைவராக மு க ஸ்டாலின் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ஆதரவாக தொண்டர்கள் கோஷம்.. பொதுக்குழு நடைபெறுகின்ற பள்ளி மைதானத்திற்குள் திமுக தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

  செய்தியாளர் : பிரகாஷ் பாண்டியன்

  Published by:Raj Kumar
  First published:

  Tags: DMK, DMK cadres, DMK General Secretary, MK Stalin