சென்னை அம்பத்தூரில் பேருந்தில் பெண் பயணியிடம் கிரெடிட் கார்டை திருடி, பாஸ்வேர்ட், ஓடிபி இல்லாமலேயே பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அம்பத்தூரில் இருந்து கீழ்ப்பாக்கத்திற்கு மாநகரப் பேருந்தில் பயணம் செய்த சித்ரா என்பவர் நிறுத்தத்தில் இறங்கியதும், தனது செல்போனை எடுத்து பார்த்தபோது கிரெடிட் கார்டில் இருந்து 15 ஆயிரம் ரூபாய் எடுத்ததற்கான குறுஞ்செய்தியால் பதறிப்போனார். இதையடுத்து, கிரெடிட் கார்டு வைத்திருந்த பர்ஸ் காணாமல் போனதை அறிந்த அவர், கீழ்ப்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், தனது கிரெடிட் கார்டின் கடவுச்சொல் இல்லாமலும், தனது செல்போனுக்கு ஓடிபி வராமலும், ஏ.டி.எம்.மில் பணத்தை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
மாநகரப் பேருந்தின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு போன்றவற்றுக்கு பெரும்பாலானோர், தங்களது பிறந்த ஆண்டு, தேதி மாதம் போன்ற எளிமையானவற்றையே பின் நம்பராக வைத்திருப்பது வழக்கம். இந்நிலையில், பணப்பையில் ஆதார் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை வைத்திருந்ததாக சித்ரா கூறிய நிலையில், அதில் இருந்த பிறந்த ஆண்டு, தேதி மாதத்தை வைத்து பணத்தை திருடியிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Credit Card, Crime News, Stolen