முகப்பு /செய்தி /சென்னை / அம்புத்தூரில் தொடர் செல்போன் திருட்டு.. அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்!

அம்புத்தூரில் தொடர் செல்போன் திருட்டு.. அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்!

மொபைல் திருட்டு சிசிடிவி காட்சிகள்

மொபைல் திருட்டு சிசிடிவி காட்சிகள்

பிடிபட்ட அஜய் (26) மற்றும் சந்தோஷ் குமார் (20) ஆகியோரிடம் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகின.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

ஆவடி, அம்பத்தூர், திருவேற்காடு, திருமுல்லைவாயில், அம்பத்தூர் எஸ்டேட் ஆகிய பகுதிகளில் தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 18 உயர் ரக செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆவடி காவல் ஆணையரக எல்லைக்கு உட்பட்ட திருமுல்லைவாயில், பொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் (45) என்பவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவர் வேலை முடித்துவிட்டு நேற்று கடந்த 3ஆம் தேதி மாலை ஆல் இந்தியா ரேடியோ அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது இரண்டு பேர் கத்தியை காட்டி மிரட்டி 500 ரூபாய் பறித்து சென்றதாக கொடுத்த புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர்.

' isDesktop="true" id="888736" youtubeid="w1Bq6B2hhnk" category="chennai">

இந்நிலையில் அன்னனூர் ரயில் நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமாக இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த இரண்டு பேரை மடக்கி பிடித்து விசாரித்ததில், செல்போன் பறித்து விட்டு வேகமாக வந்ததை ஒப்பு கொண்டனர். மேலும் பல்வேறு இடங்களில் செல்போன் பறிப்பதையே தொழிலாக இருந்ததாக ஒப்புக்கொண்ட நிலையில் அவர்களை உடனடியாக கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

பிடிபட்ட அஜய் (26) மற்றும் சந்தோஷ் குமார் (20) ஆகியோரிடம் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகின. அதில் ஆவடி, திருவேற்காடு, அம்பத்தூர் எஸ்டேட் உள்ளிட்ட பகுதியில் 20க்கும் மேற்பட்ட குற்ற சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என தெரியவந்தது. இவர்களிடமிருந்து சமீபத்தில் திருடப்பட்ட 18 உயர் ரக ஆண்ட்ராய்டு செல்போன்கள்  பறிமுதல் செய்தனர். இருவரும் மீதும் குண்டாஸ் வழக்கு பதிவு செய்த திருமுல்லைவாயில் போலீசார் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

First published:

Tags: Crime News, Mobile phone, Theft