வங்கக்கடலில் உருவாகும் புயலைத் தொடர்ந்து, கனமழையை எதிர்கொள்ள தயாராக அடுத்த மூன்று நாட்களுக்கு இருக்குமாறும், மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு குறித்து மாநகராட்சியின் அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில், 8 முதல் 10ம் தேதி வரை 24 மணி நேரமும் மாநகராட்சி களப்பணியாளர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த மழையின்போது தண்ணீர் அதிகம் தேங்கிய அனைத்து இடங்களிலும் மோட்டார்களை தயார் நிலையில் வைத்திருக்கவும், வலுவற்ற நிலையில் உள்ள மரங்கள் மற்றும் மரக்கிளைகள் அகற்றப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மண்டல வாரியாக உள்ள அனைத்து கட்டுப்பாட்டு அறைகளும் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும் என்றும், அனைத்து வார்டுகளிலும் மருத்துவ குழுக்கள் மற்றும் மருந்துகளை தயாராக வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : மாண்டஸ் புயல் எங்கு, எப்போது கரையை கடக்கும்? வானிலை மையம் அறிவிப்பு
இதனிடையே, அரக்கோணத்தில் இருந்து ஆறு மாவட்டங்களுக்கு தலா 25 வீரர்கள் அடங்கிய தேசிய பேரிடர் மீட்புக்குழு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. தஞ்சைக்கு வந்த அவர்களுடன் மழை வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்வது குறித்தும், மீட்புப் பணிகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த, பேரிடர் மீட்பு படையினர், மீட்புப் பணிகளுக்கு தேவையான கருவிகள் அனைத்தையும் தயாராக வைத்துள்ளதாக தெரிவித்தனர்.
பின்னர், அந்த குழுவினர், மழையால் அதிகம் பாதிக்கக்கூடிய பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்வதற்காக புறப்பட்டுச் சென்றனர்.
திருவாரூர் மாவட்டத்திற்கு ஹரிதேவ் தலைமையில், தேசிய பேரிடர் மீட்புக்குழுவைச் சேர்ந்த 25 வீரர்கள் சென்றடைந்தனர். அவர்கள் அனைவரும் முத்துப்பேட்டை பகுதியில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல், நாகை மாவட்டத்திற்கு வந்த தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரை, அம்மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் சந்தித்து பேசினார். பாதிக்கப்படும் முக்கிய இடங்கள் குறித்தும், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்திய அவர், புயல் மையங்கள், மீட்பு மையங்கள் மட்டுமின்றி புயலால் பாதிக்கப்படுபவர்களை தங்க வைப்பதற்காக சமுதாயக் கூடங்கள், பள்ளி என நூறுக்கும் மேற்பட்ட இடங்கள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.
புயல் மையங்களை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளும் வகையில் 04365- 1077 என்ற இலவச தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், புயலை எதிர்கொள்ள மாவட்டத்தில் அனைத்து துறையினரும் தயார் நிலையில் இருப்பதாகவும் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cyclone, Cyclone Mandous, Heavy Rainfall, Weather News in Tamil