Home /News /chennai /

அதிமுக அலுவலக கலவர வழக்கு - அடையாளம் காணப்பட்ட 100 பேர்... சிபிசிஐடி போலீசார் தகவல்..!

அதிமுக அலுவலக கலவர வழக்கு - அடையாளம் காணப்பட்ட 100 பேர்... சிபிசிஐடி போலீசார் தகவல்..!

அதிமுக கலவரம்

அதிமுக கலவரம்

கலவரம் நடைபெற்ற நாளில் பதிவான காட்சிகளை கைப்பற்றி கலவரத்தில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் கண்டு வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    அதிமுக  அலுவலக கலவரம் வழக்கில் 100 நபர்களை வீடியோ காட்சிகளை வைத்து அடையாளம் கண்டு உள்ளதாக சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

    சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜூலை 11 தேதி எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை ஸ்ரீவாரு திருமணம் மண்டபத்தில் நடைபெற்றது. அதே நாளில் அதிமுக அலுவலகத்திற்கு ஒ.பன்னீர்செல்வம் தங்கள் ஆதரவாளர்கள் வைத்தியலிங்கம், மனோஷ்பாண்டியன், உள்ளிட்ட நூற்று கணக்கான நிர்வாகிகள் சென்றனர்.

    அப்போது எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களுக்கும் ஒ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும் கலவரம் ஏற்பட்டு பலருக்கும் காயங்கள் ஏற்பட்டது. இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இது இல்லாமல் மேலும் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. பிறகு நீதிமன்றம் உத்தரவு படி இந்த வழக்கு சிபிசிஐடி போலீசார் மாற்றப்பட்டது.

    ALSO READ | இபிஎஸ்-யிடம் வழங்கப்பட்ட அதிமுக அலுவலக சாவி - ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணை!

    இதில் முக்கிய குற்றவாளியாக முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிடோர் மீது 7 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் மற்றும் கை ரேகை நிபுணர்கள், பொதுப்பணி துறை அதிகாரிகள் கடந்த 7 தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆய்வு செய்தனர்.

    சிபிசிஐடி போலீசார் அடுத்த கட்டமாக கலவரம் நடைபெற்ற நாளில் பதிவான காட்சிகளை கைப்பற்றி கலவரத்தில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் கண்டு வருகின்றனர். தற்போது வரை 100 நபர்கள் வரை அடையாளம் கண்டு உள்ளதாகவும் தகவல் தெரிவித்தனர். அடுத்த கட்டமாக கலவரத்தில் தொடர்பு உடையவர்களை நேரில் அழைத்து விசாரிக்க சம்மன் வழங்க இருப்பதாக தெரிய வருகிறது.

    செய்தியாளர்: கோகுல்
    Published by:Anupriyam K
    First published:

    Tags: ADMK, AIADMK, CBCID, Chennai

    அடுத்த செய்தி