ஹோம் /நியூஸ் /சென்னை /

யாருக்கு மாஸ் ? : மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - ஓபிஎஸ்-ஐ தொடர்ந்து இபிஎஸ் அழைப்பு 

யாருக்கு மாஸ் ? : மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - ஓபிஎஸ்-ஐ தொடர்ந்து இபிஎஸ் அழைப்பு 

மாதிரி படம்

மாதிரி படம்

நாளை அதிமுக நிர்வாகிகள் மற்றும் கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தை ஓ.பன்னீர்செல்வம் கூட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 27ம் தேதி நடைபெற உள்ளதாக அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதிமுகவில், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தனித்தனி அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு ஜனவரி 4ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ள நிலையில் இந்த மாவட்ட பொதுச்செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

இதையும் படிக்க :  திமுக எம்ஜிஆர்-ஐ வாட்ச்சை வைத்து தான் கிண்டல் செய்தது.. நான் இந்த வாட்சை வைத்து தான் திமுகவின் ஊழலை வெளிகொண்டுவரப்போகிறேன் - அண்ணாமலை பேச்சு

இதனிடையே நாளை அதிமுக நிர்வாகிகள் மற்றும் கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தை ஓ.பன்னீர்செல்வம் கூட்டியுள்ளார். இந்நிலையில், வரும் 27ம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைக்கழக செயலாளர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக செய்தி தொடர்பாளர்கள் ஆலோசனை கூட்டம், கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலுடன் இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: ADMK, Admk Party, AIADMK, Edappadi Palaniswami