ஓ பன்னீர்செல்வம் ரவுடிகளை கொண்டுவந்து எம்ஜிஆர் மாளிகையில் இருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றுவிட்டதாக
அதிமுக தலைமை அலுவலக மேலாளர் மகாலிங்கம் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
ராயப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளருக்கு மகாலிங்கள் அனுப்பியுள்ள புகாரில், கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை நடத்த சொல்லி பொதுக்குழுவின் 80 சதவீத உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் 11ம் தேதி பொதுக்குழு கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கட்சி அலுவலகத்தில் ரவுடிகள் மற்றும் குண்டர்கள் அத்துமீறி நுழைந்து குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கை எடுத்து, பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று காவல் துறை ஆணையர் மற்றும் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
மேலும், அதிமுக பொதுக்குழு நடந்துகொண்டிருந்தபோது , ஓ.பன்னீர்செல்வம் மற்றும் 200க்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்கள் என்ற பெயரில் ரவுடிகள் மற்றும் குண்டர்கள் கத்தி, கடப்பாறை, தடி, உருட்டுக்கட்டை போன்ற பயங்கர ஆயுதங்களுட கட்சி அலுவலகத்தின் கேட்டை உடைத்தும் அலுவலகத்தின் பிரதான கதவை உடைத்தும் அலுவலகத்தின் உள்ளே நுழைந்து கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ளனர்.
பன்னீர்செல்வம் மேற்பார்வையில் அங்கிருந்த பொருட்களை அடித்து சேதப்படித்து போலீசார் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் முக்கிய ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அலமாரிகளையும் அடித்து உடைத்து அதில் இருந்த தஸ்தாவேஜிகளை கொள்ளையடித்தனர். மேலும்,சில முக்கிய ஆவணங்களையும் விலை மதிப்பு மிக்க பொருட்களையும் கொள்ளையடித்தும் அவற்றை தனது வாகனத்திலும் ஓ பன்னீர்செல்வம் எடுத்து சென்றுள்ளார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் நகரத்திலிருந்து(சென்னை)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.